02-09-2006, 03:25 PM
sOliyAn Wrote:நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே!
'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆ அதைத் தானே திருப்பத் திருப்பச் சொல்லிக் கொண்டிருகிறம்.
மனிதருக்கு கட்டுப் பாடுகளை விதிப்பது யார்?அதுவும் மனிதர் தானே?சட்டங்கள் இயற்றுவது யார்?கட்டு பாடுகளை சமூக நியதிகளை ,பாதுகாப்பை உருவாக்குவது யார்?மனிதர் தானே?
ஆகவே சிறுவர் ,இளயவர் சீரழிவோம் என்று அறியாது செயற்பட விழையும் மனிதரைக் கட்டுப் படுத்த கட்டுப் பாடுகளை உருவாக்குவதும் மனிதனே.ஆகவே எமது கேள்வி இவ்வாறான கட்டுப் பாடுகளை உருவாக்க இணயத் தொழில் நுட்பத்தில் வசதிகள் இருக்கும் இடத்து அவற்றைப் பயன் படுத்தி இணயப் பாவனையை பயன் உள்ளது ஆக்கலாமே? என்பதுவே.இங்கே அதனை நிராகரித்து ,இணயம் என்னும் ஒரு சடப் பொருள் எம்மைக் கட்டுப் படுத்துகிறது என்று அதனை காரணி ஆக்கி வாதிட வேண்டாம் என்பது தானே எமது வாதம்.
அவ்வாறு மனிதர்களால் ஏற்படும் சீரழிப்புக்கள் மனிதர்களால் அகற்றப் பட மிகுதியாய் இருப்பவை பயன்கள் மட்டுமே அன்றி வேறென்ன?இதற்கெல்லாம் ஒரு விவாதம் இனியும் தேவயா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->