Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய
#54
அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் காளிமுத்துவிற்கு அம்மா கொடுத்திருக்கும் முதல் அசைன்மெண்டே வைகோவை வளைத்துப் பிடிப்பதுதானாம். ஆம்; உளவுத்துறையின் உபயத்தால் தட்டித் தட்டி கனியாகியிருக்கும் ம.தி.மு.க.வை, அம்மாவின் மடியில் விழ வைப்பதே காளிமுத்துவின் உடனடி வேலை என்கிறார்கள் அ.தி.மு.க.விலுள்ள மேல் மட்டத் தலைவர்கள். அவர்கள் சிலர் சொன்ன தகவல்களைத் திரட்டித் தருகிறோம்.

ஏழு கட்சிக் கூட்டணிக்கு எதிராக தனது பாச்சா பலிக்காது என்பதாலேயே தி.மு.க. கூட்டணியை உடைக்க பெருமுயற்சி செய்து, அதில் ‘அம்மா’ வெற்றி பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் ஸ்டாலின்தான் என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தியே ம.தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களை அ.தி.மு.க. பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது உளவுத்துறைதான். அதன் விளைவாகத்தான் கடந்த டிசம்பர் 3_ம் தேதி ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒலித்த அ.தி.மு.க. ஆதரவு கோஷம்!

தொடர்ந்து நாஞ்சில் சம்பத் போன்ற பேச்சாளர்கள் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் போய் தொண்டர்களை அ.தி.மு.க. கூட்டணிக்குத் தயார் செய்யும் வகையில் பரபரப்பாகப் பேசிய காட்சிகளும் அரங்கேறின. ம.தி.மு.க. மேடைகளில் கட்சியிலுள்ள பிறர், கலைஞர் அட்டாக்கைத் தொடங்கினாலும் வைகோ மட்டும் எந்தவிதமான ரியாக்ஷனையும் காட்டாமல்தான் இருந்தார். ஏனென்றால் அவருக்குத் தனிப்பட்ட முறையில், எந்தவித உறுதியும் அ.தி.மு.க. தரப்பிலிருந்து கிடைக்கவில்லை. தவிர, அவரிடம் உரிமையோடு பேச்சு நடத்த அ.தி.மு.க.வில் சரியான தலைவர்கள் இல்லை.

இந்நிலையில்தான் காளிமுத்துவிற்கும் வைகோவிற்கும் இருக்கும் ஆத்மார்த்தமான நட்பு அம்மா கவனத்திற்கு வர, அவருக்கு அம்மா கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்தே, வைகோ மதுரை செல்லும் அதே விமானத்தில் வைகோவின் பக்கத்து இருக்கை காளிமுத்துவிற்கு புக் செய்யப்பட, இருவரின் சந்திப்பும் ஆகாயத்திலேயே நடந்திருக்கிறது. தனது பால்ய நண்பரான காளிமுத்துவிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார் வைகோ. இதுதான் அ.தி.மு.க. _ ம.தி.மு.க. கூட்டணிக்குப் பிள்ளையார் சுழி என்கிறார்கள்.

தி.மு.க. தலைமை மீது வைகோ அதிருப்தியில் இருக்கிறார். வளைக்கிற வழியில் வளைத்தால் வந்துவிடுவார் என்று, காளிமுத்து கூறியதை முதலில் அம்மா நம்பவில்லையாம். அதன் பின்னர் டிசம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில், நெல்லையில் நடைபெற்ற தொண்டர்கள் பயிற்சிப் பாசறையில் வைகோ முதல் தடவையாக ‘கலைஞரை முதல்வராக்குவோம்’ என்கிற கோஷத்தைக் கைவிட்டு விட்டு, ஜெயலலிதா அட்டாக் இல்லாமல் பேசியதை ‘ஜெயா’ டிவி நிருபர் எடுத்த கேசட்டைப் போட்டுப் பார்த்த பிறகுதான் வைகோ அ.தி.மு.க. கூட்டணிக்கு நிச்சயம் வந்து விடுவார் என்கிற நம்பிக்கை ஜெ.வுக்குப் பிறந்ததாம்.

சரி... வைகோவிற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவேண்டும். அதற்கு என்ன செய்வது? முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், இலங்கை அதிபர் ராஜபக்சே சென்னையில் முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்ததை சமயோசிதமாய்ப் பயன்படுத்தினார் முதல்வர். ராஜபக்சேயைப் பார்க்க முடியாது என்று கூறி வைகோவை பரவசப்படுத்தியிருக்கிறார். இதுதான் வைகோவுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கிரீன் சிக்னல்!

இந்நிலையில் தி.மு.க. தரப்பில் வைகோவை சமரசப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்தே கலைஞர் _ வைகோ சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. ‘எனது சேப்பாக்கத்தைக் கூட எடுத்துக்கய்யா’ என்று கலைஞர் உருக்கமாய்க் கூறினாலும் அதற்கு வைகோ மசியவில்லையாம். பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிட்டாராம் வைகோ. தான் இன்னமும் அ.தி.மு.க. ஆதரவு நிலையிலேயே இருப்பதைத் தெளிவு படுத்துவதற்காகவே நாகர்கோவில் கல்லூரி விழாவில் பேசிய வைகோ, ‘ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்’ என்று பொடி வைத்துப் பேசியிருக்கிறார். இதற்குப் பதிலளிக்கும் வண்ணம்தான் பொதுக்குழுவில் அம்மாவும் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பதில் சொல்ல, பொதுக்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றிருக்கிறார்கள். ஒரு மிகப் பெரிய கட்சி நம்முடன் வர இருக்கிறது என்று அம்மா பொதுக்குழுவில் சொன்னது ம.தி.மு.க.வை மனதில் வைத்துத்தான் என்கிறார்கள் அ.தி.மு.க. கரைவேட்டிகள். ஆக, ‘அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டது. மதில் மேல் இருந்த பூனை, போயஸ் தோட்டத்தில்தான் குதிக்கப் போகிறது என்பதுதான் இன்றைய நிலை’ என்கிறார்கள்.

சரி... எல்லாம் ஓ.கே. வைகோவிடம் கூட்டணி பற்றிப் பேசத் தகுதியான தலைவர் யார்? என்று அம்மா தீர யோசித்த பிறகே, அப்பொறுப்பை காளிமுத்துவிடம் ஒப்படைத்திருக்கிறாராம்! வைகோவுக்கும் காளிமுத்துவுக்கும் இடையிலுள்ள நட்பு பற்றி இப்படிச் சொன்னார் ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குப் பக்கத்தில் இருக்கும் ராமத்தேவன்பட்டிதான் காளிமுத்து பிறந்த ஊர். இருவரும் கல்லூரி கால நண்பர்கள். இருவரையும் இணைத்தது தமிழும், திராவிட உணர்வுகளும்தான். விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து, தி.மு.க. சார்பில் பெ.சீனிவாசன் போட்டியிட்டார். அப்போது வைகோ_காளிமுத்து ஆகிய இருவருமே தி.மு.க. மாணவர் அணியிலிருந்துகொண்டு தீவிர பிரசாரம் செய்திருக்கிறார்கள். அதன்பிறகு, காளிமுத்து அ.தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரான பிறகும்கூட, வைகோவிடம் பாசம் கொண்டிருந்தார். இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வது வழக்கம்.

1989_ம் ஆண்டு சிவகாசி எம்.பி. தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வைகோ, அ.தி.மு.க. வேட்பாளர் காளிமுத்து. இருவரும் அனல் பறக்க பிரசாரம் செய்தாலும், நேருக்கு நேர் சந்திக்கும்போது, கட்சிப் பாகுபாட்டையெல்லாம் மறந்து சாதாரணமாகப் பேசிக் கொள்வதைத் தொண்டர்களே வியப்புடன் பார்த்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாகவே வைகோவிடம் பேசும் பொறுப்பை காளிமுத்துவிடம் ஒப்படைத்திருக்கிறார் முதல்வர் என்கிறார்கள். ஆக, மொத்தத்தில் கூட்டணி விஷயத்தில் ஒரு திடீர்த் திருப்பம் ஏற்படும் என்றே பலரும் சொல்கிறார்கள்!

http://www.kumudam.com/reporter/mainpage.php
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-22-2006, 12:25 PM
[No subject] - by Mathuran - 01-22-2006, 12:52 PM
[No subject] - by Vasampu - 01-22-2006, 12:55 PM
[No subject] - by cannon - 01-22-2006, 01:30 PM
[No subject] - by kurukaalapoovan - 01-22-2006, 02:28 PM
[No subject] - by kuruvikal - 01-22-2006, 02:43 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:13 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:25 PM
[No subject] - by nirmalan - 01-22-2006, 03:25 PM
[No subject] - by cannon - 01-22-2006, 03:26 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-22-2006, 03:31 PM
[No subject] - by தூயவன் - 01-22-2006, 03:37 PM
[No subject] - by Mathuran - 01-22-2006, 05:02 PM
[No subject] - by Mathan - 01-23-2006, 06:51 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:39 AM
[No subject] - by Mathan - 01-23-2006, 07:42 AM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 08:04 AM
[No subject] - by வர்ணன் - 01-23-2006, 08:06 AM
[No subject] - by MEERA - 01-23-2006, 08:49 PM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 05:40 AM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 05:41 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 06:15 AM
[No subject] - by தூயவன் - 01-24-2006, 06:19 AM
[No subject] - by கந்தப்பு - 01-24-2006, 07:05 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 07:08 AM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 08:16 AM
[No subject] - by வர்ணன் - 01-24-2006, 08:25 AM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 10:36 AM
[No subject] - by Vasampu - 01-24-2006, 01:59 PM
[No subject] - by Luckyluke - 01-24-2006, 03:08 PM
[No subject] - by Danklas - 01-24-2006, 03:24 PM
[No subject] - by MEERA - 01-24-2006, 08:38 PM
[No subject] - by kurukaalapoovan - 01-24-2006, 10:26 PM
[No subject] - by அகிலன் - 01-25-2006, 01:03 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:35 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:42 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 04:56 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 04:58 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 05:12 AM
[No subject] - by Luckyluke - 01-25-2006, 08:46 AM
[No subject] - by தூயவன் - 01-25-2006, 01:57 PM
[No subject] - by வினித் - 01-25-2006, 03:33 PM
[No subject] - by Thala - 01-28-2006, 12:51 AM
[No subject] - by அருவி - 01-28-2006, 02:41 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-01-2006, 01:19 PM
[No subject] - by sinnappu - 02-01-2006, 11:59 PM
[No subject] - by அகிலன் - 02-02-2006, 12:43 AM
[No subject] - by தூயவன் - 02-02-2006, 04:49 AM
[No subject] - by Birundan - 02-06-2006, 12:18 PM
[No subject] - by Nellaiyan - 02-09-2006, 03:07 PM
[No subject] - by Mathan - 02-09-2006, 07:38 PM
[No subject] - by Mathan - 02-13-2006, 08:40 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006, 08:45 PM
[No subject] - by Thala - 02-18-2006, 09:03 PM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-18-2006, 09:23 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:34 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:35 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:37 PM
[No subject] - by Sukumaran - 02-19-2006, 06:41 PM
[No subject] - by கறுப்பன் - 02-20-2006, 06:08 PM
[No subject] - by வடிவேலு - 02-20-2006, 06:44 PM
[No subject] - by Mathan - 02-20-2006, 07:12 PM
[No subject] - by AJeevan - 02-20-2006, 11:04 PM
[No subject] - by Luckyluke - 02-21-2006, 01:13 PM
[No subject] - by அகிலன் - 02-21-2006, 03:53 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:16 PM
[No subject] - by Mathan - 02-21-2006, 05:25 PM
[No subject] - by Mathuran - 03-04-2006, 08:21 AM
[No subject] - by ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-04-2006, 10:13 AM
[No subject] - by வினித் - 03-04-2006, 10:18 AM
[No subject] - by Thala - 03-04-2006, 01:27 PM
[No subject] - by sinnakuddy - 03-04-2006, 06:47 PM
[No subject] - by AJeevan - 03-04-2006, 09:40 PM
[No subject] - by விது - 03-04-2006, 10:12 PM
[No subject] - by AJeevan - 03-04-2006, 10:40 PM
[No subject] - by eelapirean - 03-05-2006, 12:18 AM
[No subject] - by adithadi - 03-05-2006, 02:56 AM
[No subject] - by AJeevan - 03-05-2006, 04:21 PM
[No subject] - by tamilini - 03-05-2006, 06:41 PM
[No subject] - by மின்னல் - 03-05-2006, 08:18 PM
[No subject] - by AJeevan - 03-05-2006, 10:30 PM
[No subject] - by கறுப்பி - 03-06-2006, 07:45 AM
[No subject] - by AJeevan - 03-07-2006, 09:06 PM
[No subject] - by sinnakuddy - 03-07-2006, 10:19 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-07-2006, 11:39 PM
[No subject] - by மின்னல் - 03-08-2006, 06:35 AM
[No subject] - by கறுப்பி - 03-10-2006, 04:05 PM
[No subject] - by விது - 03-10-2006, 08:51 PM
[No subject] - by putthan - 03-11-2006, 02:47 PM
[No subject] - by Aravinthan - 03-15-2006, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)