Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் - நாணயமாற்று
#15
இங்கே பலருக்கு நாணயப் பரிமாற்றம் சம்பந்தமாகக் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. நாணயப் பரிமாற்றத்தை (money market) நிர்ணயிப்பது நாணயப் பரிமாற்றுச் சந்தை.இப் பரிமாற்றுச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட நாணயம் தமது தேசிய நலங்களுக்கு, அதாவது நிதிக் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முரணாக அமைந்தால், அந்தக் குறிப்பிட்ட நாணயத்தை நாணயச் சந்தயில் வாங்கியோ விற்றோ மத்திய வங்கிகள் நாணயப் பெறுமதியை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருக்க(managed currency ) முயற்ச்சிக்கும்.அதற்கு அந்த மதிய வங்கியிடம் தேவயான டொலர்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். அரசுகள் இவ்வாறே நாணயச் சந்தையில் தலயிட்டு நாணய விகிதத்தைக் கட்டுப் படுதுகின்றன.ஆனால் சில நாடுகள் நாணயப் பெறுமதியை தாமாக நிர்ணயிக்கின்றன(fixed currency ).ஆனால் இந்த விலை நிர்ணயமானது சந்தைப் பெறுமதியை விடக் கூடவோ குறயவோ இருக்கும்.
ஆனால் மற்றய நாடுகள் கொடுக்கல் வாங்கல்கள் செய்யும் போது டொலரில் அல்லது யுரோவில் ,அதாவது சந்தை நிர்ணயம் செய்யும் ஸ்திரமான நாணயப் பெறுமதியயே பாவிக்கின்றன(hard currencies). நாடுகளுகிடயேயான பரிமாற்றம் சர்வதேச நாணய நிதியத்தால் நிர்வகிக்கப்பட்டு சவரின் ரேட்டிங்(souverign rating) என்னும் அலகினால் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கல் வாங்கல்கள் தீர்க்கப் படுகின்றன.ஆகவே ஒரு மத்தியவங்கியோ அல்லது பொருளாதார, நிதிக் கொள்கைகளயோ ஏற்படுதுவதற்கும் நிர்வகிப்பதற்கும் சர்வதேச ரீதியிலான இறமை என்னும் அங்கீகாரம் அவசியமாகிறது. அல்லது இன்னொரு நட்பு நாடொன்றினூடாக இதனை அந்த நாட்டு இறமையினூடாகவும் நடைமுறைப் படுத்தலாம்.அதாவது அந்த நாட்டுடன் ஒரு உடன் படிக்கயின் கீழ் நாம் எமது நாணயப் பெறுமதியை அந்த நாட்டு நாணய்த்திற்கு ஒரு நிர்ணயித்த பெறுமதியின் அடிப்படயில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்யலாம்.

மேலும் வங்கிகள் தாம் வாங்கும் நாணயங்களை ஈற்றில் மதியவங்கியினூடாகவே கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேணும்.அப்போதே மத்திய வங்கி தனக்கு அந்த நாட்டில் இருக்கும் இறமை என்னும் அதிகாரத்தைக் கொண்டு விலயை நிர்ணயிக்கிறது.மத்தியவங்கி தான் தோன்றித் தனமாக இதனைச் செய்ய முடியாது ,காரணம் அது அந்த நாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலமைகளுக்கு ஏற்பவே செயற்பட முடியும்.அவ்வாறு செய்யாமல் அது அதிகப் படியானா உள்ளூர் நாணயங்களை அச்சடித்தாலோ அது விலைவாசியைக் கூட்டி,அந்த நாணயத்தின் சர்வதேச ரீதியான பெறுமதியைக் குறைத்து விடும்.இது அந்த நாட்டின் சவரின் ரேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

மொத்ததில் நாம் எமது கட்டுப் பாட்டுப் பகுதியில் ஒரு விலையை நிர்ணயித்தாலும் சர்வதேச ரீதியாக பணப் பரிமாற்றம் செய்வது சர்வதேச முறமைகளுக்கு அமைவாக என்றால் அது சிறி லங்கா மத்திய வங்கிக் குள்ளாகவே அமையும்.ஆனால் அவ்வாறல்லாமல் இலங்கயில் உள்ள அன்கீகரிக்கப்பட்ட வங்கி நடைமுறைகளுக்குள்ளாக காசை அனுப்பாவிட்டால் அது இலங்கை அரசாங்கத்திற்கு நேரடியான அன்னியச் செலாவணியாகக் கிடைக்காது.ஆனால் எமது கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இன்றும் நாம் இலங்கை அரசாங்கத்தின் நாணயத்தைப்பயன்படுதுவதால் நாணயப் பரிமாற்றம் இலங்கை ருபாவில் நிகழும் போது அது மறைமுகமாக இலங்கை அரசாங்கத்தின் நாணயமான ரூபாவைப் பலப்படுதுகிறது.

ஆகவே எமது நாணயப் பரிமாறத்தை நாம் கட்டுப் படுத்த எமக்கு ஒரு நாணயம் முதலில் அவசியம்,அத்தோடு சர்வதேச ரீதியாக அதனை மாற்றவும் எமது இறமை சார்ந்த சவரின் ரேட்டிங்க்கை ஏற்படுத்தவும் சர்வதேச உடன்படிக்கை அங்கிகாரம் வேண்டும்.அல்லது இன்னொரு நாட்டு நாணயத்துடன் எமது நாணயத்தை(dependent currency ) ஒருங்கிணைப்பதால் நாம் எமது இறமையை அந்த நாட்டிற்கூடாகப் பெற்றுக் கொண்டு,சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

இவயே நான் விளங்கிக் கொண்டவை,மேலும் யாருக்காவது விளக்கம் இருந்தால் அறியத் தரவும்.
Reply


Messages In This Thread
[No subject] - by sanjee05 - 02-08-2006, 10:27 AM
[No subject] - by iruvizhi - 02-08-2006, 10:37 AM
[No subject] - by அருவி - 02-08-2006, 10:59 AM
[No subject] - by iruvizhi - 02-08-2006, 07:18 PM
[No subject] - by Vasampu - 02-08-2006, 07:38 PM
[No subject] - by iruvizhi - 02-08-2006, 07:44 PM
[No subject] - by Vasampu - 02-08-2006, 08:12 PM
[No subject] - by iruvizhi - 02-08-2006, 08:15 PM
[No subject] - by Vasampu - 02-08-2006, 09:12 PM
[No subject] - by Thala - 02-09-2006, 12:07 AM
[No subject] - by அருவி - 02-09-2006, 11:17 AM
[No subject] - by Shankarlaal - 02-09-2006, 12:17 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 12:44 PM
[No subject] - by narathar - 02-09-2006, 02:22 PM
[No subject] - by Vasampu - 02-09-2006, 02:41 PM
[No subject] - by அருவி - 02-09-2006, 03:28 PM
[No subject] - by ஈழமகன் - 02-09-2006, 10:51 PM
[No subject] - by kurukaalapoovan - 04-16-2006, 08:54 AM
[No subject] - by காவடி - 04-16-2006, 10:14 AM
[No subject] - by kurukaalapoovan - 04-16-2006, 10:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)