02-09-2006, 01:45 PM
Luckyluke Wrote:பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு வீட்டில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே என் வாதம்.... காதலரை சந்திக்க எவ்வளவோ பொது இடங்கள் இருக்கிறது.... அது என்ன தனிமையில் தான் சந்திக்க வேண்டுமா? பிரச்சினை வரும் என்று தெரிந்தே நெருப்போடு விளையாடலாமா? அந்த காதலனின் மனமே கூட தனிமையின் காரணமாக சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறதே?
பெண்களுக்கு யார் சுதந்திரம் கொடுக்க வேண்டும்..அவங்களுக்கு இயல்பா எல்லா சுதந்திரமும் எல்லா மனிதரைப் போலவும் இருக்கு..! அதை தடுக்க முடியாது. ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல...எல்லோருக்கும் அவசியமானது கட்டாயமானது. அதைப் பெண்கள் மீறினும் சரி ஆண்கள் மீறினும் சரி கண்டிக்க வேண்டும்..! ஆனால் காதலியோடு மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் தனிமையான இடத்தில் என்ன சொர்க்கத்தில் இருந்தாலும் சஞ்சலப்பட வேண்டிய அவசியமில்லை ஒழுக்கமுள்ள காதலனுக்கு..! காதலியே சஞ்சலப்படாத போது இவர்களுக்கு என்ன சஞ்சலம்..! காதல் என்ற பெயரில் கருமாந்திரம் பண்ண நினைப்பவர்கள் சஞ்சலப்படலாம்..அப்படியானவர்கள் பண்ணுவதும் காதல் இல்லை...!
இங்கு காதலன் தவறு செய்யவில்லை..எவனோ தப்புப் பண்ணினது அவனை தண்டிக்காமல் பாவம் அந்தக் காதலர்களில் குற்றம் பிடிப்பத்தில் என்ன நியாயம்..! உங்கள் தங்கைக்கு இப்படி ஒரு கதி என்றால் என்ன உணர்வீர்கள்..தங்கையையா தண்டிப்பீர்கள்...???! இது ஒரு சம்பவம் மட்டுமல்ல..அந்தப் பெண்ணின் மனநிலையில் இருந்து பார்க்கும் போதுதான் அவளின் வேதனை புரியும்..எத்தனை கனவுகள் சுமந்திருப்பாள்...எல்லாத்தையும் பாழாக்கிட்டு போன காடையர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

