02-09-2006, 11:17 AM
Vasampu Wrote:1) வெளிநாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் எந்த வங்கிக்கு பணம் அனுப்பினாலும் முதலில் அந்நாட்டின் மத்திய வங்கிக்குத் தான் பணம் சென்றடையும். பின்பு அந்தப் பணத்தை குறிப்பிட்ட அந்த வங்கிக்கு ( அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியாயின் ) மத்திய வங்கி அனுப்பி வைக்கும்.
2) <b>நாணைய மாற்றுப் பட்டியலை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம்.</b> நீங்கள் இலங்கையில் சில தனியார் கடைகளிலும் நாணைய மாற்றுப் பட்டியல் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் நீங்கள் வெளிநாட்டு நாணயங்களை கொடுத்து இலங்கை நாணயத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதுபோல் தற்பேர்து தமிழீழ வைப்பகம் நாணைய மாற்றுப் பட்டியலை வெளியிட்டு இருப்பதன் நோக்கமும் அவர்களிடமும் நீங்கள் அங்கு செல்லும் போது வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காகவே.
கடந்த வருடம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பாதுகாப்பான வங்கிகளில் தமிழீழ வங்கியும் உள்ளடக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஆனால் தமிழீழ வங்கி ஒரு நாட்டில் பதிவுசெய்யப்பட்ட வங்கியல்ல. அது தமிழீழ நிழழரசாங்கத்தின் தேசிய வங்கியாகச் செயற்படுகிறது. எந்த வொரு வங்கிக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப வேண்டியிருந்தால் அது ஒரு நாட்டில் பதியப்பட்டிருக்கவேண்டும். அதாவது ஒரு நாட்டின் சட்டதிட்டங்களிற்கு ஏற்ப அது ஒரு வங்கியாக கணிக்கப்படவேண்டும். நீங்கள் இலங்கைக்கு எவ்வகையினால் பணம் அனுப்பினாலும் அதனால் இலங்கை அரசாங்கம் வரி அறவிடுகிறது. உண்டியலில் அனுப்பினாலும் சரி வங்கிமூலம் அனுப்பினாலும் சரி. இன்று இலங்கைக்கு வெளிநாட்டு செலவானியைப் பெற்றுத்தருபவர்களாக தமிழர்களே இருக்கிறார்கள்.(மலையகத்தில் பெருந்தோட்டங்களிலும் தமிழர்கள், புலம் பெயர்ந்து இல்கைக்கு பணம் அனுப்புவர்களும் தமிழர்கள்<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->)
மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தினை யாரும் வெளியிட முடியாது. யாராயினும் வைத்திருக்க முடியுமே தவிர யாரும் வெளியிட முடியாது. அத மத்திய வங்கியினால் வெளியிடப்படுகிறது. 2000ம் ஆண்டிற்கு கிட்டிய ஆண்டு ஒன்றில் (ஆண்டை தெளிவாக குறிப்பிட முடியவில்லை) மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. அதாவது அன்றிலிருந்து அமெரிக்க நாணயத்தின் சந்தைப் பெறுமதியைக் கொண்டு நாணய மாற்று விகிதம் கணிக்கப்பட்டு மத்திய வங்கியினால் வெளியிடப்படுகிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

