02-09-2006, 08:07 AM
Quote:பின்னர் திருமணத்தை தலைமை வகித்து ஒப்பேற்றிய பேராசிரியர் சண்முகதாஸ் தம்ப தியர் மாலையை எடுத்து மணமக்களுக்கு வழங்க மணமக்கள் மாறி, மாறி அணிந்து கொண்டனர்.
தொடர்ந்து மங்கல நாண் மணமகனால் பூட்டப்பட்டது.
அடுத்து தலைமை தாங்கும் தம்பதியினர், மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மணமக்கள் தலைமைக்குரியயோரையும், பெற்றோரையும் வணங்கி ஆசிபெற்றனர்.
இதில என்ன மாற்றம்...புரோகிதரை விட்டம் மந்திரத்துக்குப் பதில் பா ஓதினம்..அவ்வளவும் தான்..!
முக்கியமான மங்கள நாணை மணமகன் மட்டும் தானே பூட்டினார் மணமகளுக்கு..! ஏன் மணமகளுக்கும் மணமகன் கழுத்தில ஒரு நாண் பூட்ட அனுமதிக்கவில்லை..! மாறிமாறி மாலை மாற்றிக் கொள்ளலாம்..மோதிரம் அணிவிக்கலாம்..ஆனால் மங்கள நாண் மட்டும் மணமகள் மட்டுமா தரிக்க வேண்டும்..??! குறிப்பிட்டவரின் துணைவி தானே அவங்க..அவங்க விருப்பத்துக்கு ஒரு நாணை அவர் ஏன் தாங்கக் கூடா..! பா ஓதலாம்..புரோகிதர விடலாம்..அது சபை முடிய மறந்திடும்..ஆனா அணிஞ்ச நாண் இருக்கும் எப்பவும் அடையாளமா...அன்புப் பரிசா..ஆனா இன்னும் மணமகன்கள் அந்தளவுக்கு துணைவியிட்ட ஒரு அன்புப் பரிசை வாங்கிற அளவுக்கு எதிர்பார்ப்பையும் வளர்க்கல்ல...அந்தளவுக்கு அவங்க மனங்கள் உண்மையாக மாறவும் இல்லைப் போல..! நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படனும்...ஆனா சிலது திட்டமிட்டு மறைக்கப்படுவதும் வெளிப்பட வேண்டும்..!
நிச்சயமா மங்கள நாண் ( தாலி ) வேணாங்கிற கூட்டமில்லை நாங்கள்..அப்படிச் சொல்லுறது இனத்துவ அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமா இழக்க வழி செய்யும்...ஆனால் ஒரு ஆண் தன் துணைவியிடம் ஒரு மங்கள நாணை எதிர்பார்ப்பது அவளின் அன்புப் பரிசாக அடையாளமாக...ஏன் சாத்தியமில்லை..! நிச்சயம் அவனுக்குள்ளும் அப்படி ஒரு ஆசை இருக்க வேண்டும்..! அது இயல்பாக எழ வேண்டும்...! உண்மை அன்பிருந்தா நிச்சயம் எழும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

