02-08-2006, 10:25 PM
கதவை தட்டியபடி ஒரு காவல் துறை அதிகாரி சாந்தியின் அறைக்குள் நுளைந்து தன்னை அறிமுக படுத்தி விட்டுஉங்களிடம் கொஞ்சம் விபரங்கள் அறிய வேண்டும் இப்போது முடியுமா? அல்லது பின்னர் வரவா எண்று பண்பாக கேட்டார்
சாந்தி பதில் வணக்கம் கூறி விட்டு அந்த அதிகாரியிடம். எனக்கு பிரெஞ்சு மொழி அதிகமாக பேச தெரியாது வெளியே எனது நண்பர் ஒருவர் நிக்கிறார் அவரை அழைத்தால் உதவியாக இருக்கும் என்று கூற அந்த அதிகாரியும் வெளியே போய் வெளியில் நின்ற சிவாவிடம் விபரம் கூறி அழைத்து வந்தார் .
உள்ளே வந்ததும் ஒரு சிறிய நவீன தட்டச்சு இயந்திரத்தை எடுத்து அதில் சிவாவின் விபரங்களையும் பதிந்து விட்டு சாந்தியை பார்த்து சரி உங்களிற்கு நடந்த பிரச்சனைகளை பயப்படாமல் நன்றாக யோசித்து என்னிடம் கூறுங்கள் என்று விட்டு சிவாவை பார்த்தார்.
சிவா சாந்தியை பார்த்து நடந்த விபரங்களை கேக்கிறார் என்ன முடிவெடுத்திருக்கிறீங்கள்?? என்று தனது கேள்வியை வீசிவிட்டு அவள் என்ன பதில் சொல்ல போகிறாள் என்கிற ஒரு வித தவிப்புடன் தலையைண குனிந்து கொள்ள. ஒருமுறை தொண்டையை செருமி விட்டு இனியென்ன நடந்த உண்மைகளை சொல்லுவமெண்டு முடிவெடுத்திருக்கிறன் என்று சாந்தியின் குரல் தளுதளுத்து வெளியே வந்து.
சாந்தி சொல்ல சொல்ல அதை சிவாவின் மொழி பெயர்ப்புடன் அந்த காவல் துறை அதிகாரி தட்டச்சில் விரைவாக பதிவு செய்து கொண்டிருந்தார் இடையிடையே ரவியின் சித்திரவதை முறைகளை கேட்ட போதெல்லாம் இப்படியெல்லாம் செய்தானா? என்று ஆச்சரியபட்டு கேட்டபடி சாதாரண மனிதன் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள்.
;சிலவேளை அவனுக்கு மனநோய் ஏதும் இருக்கலாம் என்றவாறே வாக்கு முலத்தை பதிவு செய்து அதில் சாந்தியினதும் மற்றும் சிவாவினதும் கையெளுத்துகளை பெற்று கொண்டு நீங்கள் குணமடைந்து வீடு போனதும் அருகிலுள்ள உங்கள் காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். அங்கும் உங்களிடம் சில விபரங்கள் கேட்பார்கள் மற்றபடி நீங்கள் பயப்பட தேவையில்லை நீங்கள் குணமடைந்து நீதிமன.றம் வரும்வரை ரவி காவலில்தான் இருப்பார்.
நீங்கள் தேவையானால் சட்ட ஆலோசகர் ஒருவரை நாடுங்கள்;கள் நாங்களும் உங்கள் வைத்தியரிடம் உங்கள் உடல் நிலை பற்றி முழுவிபரம் கோரியிருக்கிறோம்.என்றுவிட்டு அந்த அதிகாரி போய்விட்டார்.
அந்த அதிகாரி வெளியே போனதும் சிவா சாந்தியை பார்த்து இப்பதான் ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறியள். அதுவரைக்கும் சந்தோசம் ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோஎல்லாம் நல்லபடி நடக்கும் உங்களை வீட்டை அனுப்ப இரண்டு மூண்டு நாள் செல்லுமாம் சாப்பாடு எல்லா வசதியும் இங்கை செய்து தருவினம்
நான் நாளைக்கு வந்து பாக்கிறன். என்று விடை பெற்றான்.
சாந்தி உடல் நலம் தேறி வந்ததும்அவர்களின் வழக்கு எடுத்து கொள்ளபட்டு. ரவிக்கு போதை பழக்கத்தை தவிர வேறு மன சம்பந்தமான வியாதிகள் ஏதும் இல்லையென்று வைத்தியரால் சான்றிதழ் வழங்கபட்டதாலும் சாந்தியை மோசமாக தாக்கியதறகான் ஆதாரங்களாக வைத்தியர் மற்றும் அயலவர்கள் சிவா பேன்றோரின் காவல் துறை புகார் பதிவுகள் ஆதாரங்களையும்; சாந்தியின் நேரடி வாக்கு மூலத்தையும் வைத்து ரவி திட்டமிட்டே சாந்தியை துன்புறுத்தினான் என்றும் அதனால் அவனுக்கு அபராதமும் 5 ஆண்டுகள் காவல் தண்டனையும் நீதிபதியால் வழங்கபட்டது.
அத்துடன் சாந்திக்கு விவாக ரத்து கோரவிரும்பின் அதற்கான் உதவிகளை செய்யவும் வேறு உதவிக்காகவும் ஒரு பொது தொண்டு நிறுவனம் ஒண்றும் காவல் துறையால் பரிந்துரைக்கபட்டு ஆலோசனையும் வழங்கபட்டது.சாந்தியும் சில நாட்களில் ரவியிடம் சட்டபடி விவாக ரத்து கோரியிருந்தாள்.அதுவரை சிவாவே அவளுக்கு உதவியாய் ஓடியோடி மொழி பெயர்ப்பு மற்றும் சகல உதவிகளும் செய்து கொடுத்தான்.
நாட்கள் வாரங்களாக சாந்தியும் படிப்படியாக மன நிலையிலும் தேறிவகுப்புகளிற்கு போக ஆரம்பித்தாள்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவா மற்றும் சிறியுடன் வந்த கலகலப்பாக பேசிபெழுதுகள் போக ஆரம்பித்து வருடமும் ஒண்று போய்விட்டது.சாந்திக்கும் முறைப்படி விவாகரத்து கிடைத்து விட்டது.
அன்று ஒரு விடுமுறை நாள் சிவா தொலை பேசியில் கதைத்து முடித்து வைத்ததும். சிவாவிடம் யாரது சாந்தியோ என்னவாம் என்று கேள்வியை தொடுத்தான் சிறி. ஒம் அவாக்கு தாயின்ரை கடிதம் வந்ததாம் இண்டைக்கு அவான்ரை தங்கச்சிக்கு கனடாவிலை ஒரு சம்பந்தம் சரி வந்து கலியாணம் நடக்க போகுதாம்.அதுதான் அடிச்சு சொன்னவா அதோடை முக்கியமா இன்னொரு விசயமம் என்னட்டை கதைக்கவேணுமாம் நேரை வந்து கதைக்கிறணெண்டிட்டு வைச்சிட்டா.
நானும் உன்னட்டை சாந்தி பற்றி தனிய ஒரு விசயம் கதைக்கவேணுமெண்டு நினைச்சனான் சிவா நீ என்னோடை சின்னிலை இருந்து நண்பணெண்டபடியா அதை தப்பா எடுக்கமாட்டாய் எண்ட நினைக்கிறன். எண்று புதிர் போட்டு விட்டு சிறி சிவாவை ஒரு கணம் உற்று பார்த்தான்

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/