Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சரித்திரமாகிவிட்ட கௌசல்யன்
#8
<span style='color:darkred'><b>சிறிலங்க அரசாங்கம் மீது கேணல் பானு கடும் சாடல் </b>
தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இயல்பு நிலையை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறையற்று இருப்பதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதி கேணல் பானு சாடியுள்ளார்.


<b>லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திர நேரு உள்ளிட்டோரின் முதலாண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வையொட்டி படுவான்கரை அம்பிளாந்துறையில் கௌசல்யன் கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.</b>

<b>நிகழ்வில் கேணல் பானு பேசியதாவது:</b>

துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களைக் களைந்து வெளியேற்றுதல், மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இயல்பு நிலையைத் தோற்றுவித்தல் ஆகியவை அமைதிப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதைச் செயற்படுத்த மறுக்கிறது.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணுவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறையின்றி உள்ளது.

சுயநலன்களுக்காக தேசிய ஐக்கியத்தை சிதைக்க முயன்ற துரோகிகளின் அனைத்துத் தாக்குதல்களையும் எமது போராளிகள் முறியடித்துள்ளனர். ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நிலையில் தங்களது சொந்த மக்களுக்கு எதிராக அவர்கள் திரும்பியுள்ளனர்.

மக்களின் விடுதலைக்காக தொடக்க காலத்தில் பணியாற்றிய கௌசல்யன், ஆயுத இயக்கத்திலும் கடுமையாகவும் சிறப்பாகவும் செயற்பட்டார். தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றார் கேணல் பானு.

மேலும் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கௌசல்யன் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டப் பணிகளையும் கேணல் பானுந் நினைவு கூர்ந்தார்.

<b>இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி பேசியதாவது:</b>

அமைதி முயற்சிகளில் அக்கறை இருப்பதாகக் காட்டுகிற சிறிலங்கா அரசாங்கம், தேச விடுதலைக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறது. இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் தொடங்கி ரணில் விக்கிரமசிங்க கால ஒப்பந்தம் வரை தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையைக் குலைக்கும் வகையில் வலைப் பின்னல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த வலைப்பின்னல்களை செயலிழந்து போகச் செய்யும் ஆற்றல் கொண்டவராக எமது தலைவர் உள்ளார்.

தமிழர் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் எதுவித முன் நகர்வுகளை மேற்கொள்ளாத நிலையில் அனைத்துத் தமிழ் மக்களும் தலைவரின் கரத்தை வலுப்படுத்த ஒன்றிணைய வேண்டும் என்றார் அவர்</span>

<i><b>தகவல் மூலம்- புதினம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 02-03-2006, 07:37 AM
[No subject] - by மேகநாதன் - 02-03-2006, 07:41 AM
[No subject] - by Aravinthan - 02-05-2006, 02:02 AM
[No subject] - by RaMa - 02-05-2006, 07:19 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:34 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:44 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 05:53 PM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 06:11 PM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:30 AM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)