02-08-2006, 05:52 PM
கந்தப்பு Wrote:இல்லதம்பி குறை நினைக்கவேண்டாம். என்னைப்போல பல வயதானவர்கள் தமிழீழத்தில் வாழவே விருப்பம். பலர் பிள்ளைகளுக்கு, கணவன்,மனைவிகளுக்குப்பயந்து விருப்பமில்லாமல் வெளினாடுகளில் வாழ்கினம். எனக்குத்தெரிந்த ஒருவர் 70 வயது இருக்கும். அவர் வைத்திய தாதியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வேலை செய்யவிருப்பம். ஆனால் அவரின் பிள்ளைகள் அவர் அங்கு போகத்தடுக்கிறார்கள். எதாவது வருத்தம் வந்தால் ஆர் பாப்பினம் என்று அவர்களின் பிள்ளைகள் கேக்கினம். எல்லாச்சொத்துக்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து,அவர்களிடம் கையெந்திக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற வயோதிபர்கள் தமிழீழத்துக்கு போகவிரும்பியும் மனைவி,கணவர்,பிள்ளைகளிடன் பேச்சுகளுக்கு எதிர்பேசாமலும் வெளினாடுகளில் வாழ்கினம்.
கந்தப்பு சொல்லுறது போலவும் நடக்குது. அதேவேளை வெளிநாட்டுக்கு வந்த பல ஓய்வூதியக்காரர்கள் வெளிநாடுகளில் வாழப்பிடிக்காமல் ஊர் திரும்பிவிட்டார்கள்..! அங்கு அவைக்கு சுதந்திரம் அதிகம்..குளிருக்க மனிசர் படுறபாடு தேவையா என்றிட்டு போயிட்டினம்..! ஒருவருக்கு நிரந்தர வதிவிடம் கிடைத்தும் போடா என் சிறீலங்கன் பாஸ்போட் தா என்று கேட்டு வாங்கிப் போனவர்..!
எங்கள் நாட்டின் காலநிலை சொர்க்கம் போல என்கிறார்கள் அங்கு போய்வந்த வெள்ளையர்கள்..! அவர்கள் வாழ்க்கையை வாழப்பிறந்தவர்கள்.. நாமோ வசதி வாய்ப்புக்காக அடிமையாகவும் வாழக்கூடியவர்கள்..! எங்கே புகழிடத்தில் எத்தனை தமிழர்கள் அரச உயர்பதவிகளில் இருக்கினம்...சொல்லுங்கோ...கை விரல் விட்டு எண்ணலாம்..! எல்லாம் கூலிகள்..! ஆனால் காசுக்காக எங்களவர்கள் எதுவும் செய்வார்கள்..! வெள்ளையர்கள் எங்களை எருமைகள் போல மேய்ப்பார்கள்..! தன்மானமுள்ளவை இருக்க மாட்டினம்..! நமக்குத் தெரிந்த ஒருவர் மருத்துவராக கடமையாற்றியவர்..பல வருட அனுபவம் இருந்தும் உயர்பதவிகளுக்கு செல்ல முடியவில்லை.. அவர் இப்போது தாயகம் சென்று அங்கு பணிபுரிகிறார்..அப்படி கொஞ்சம் சூடுசுரணை உள்ள தமிழர்களும் இல்லாமல் இல்லை..! அவர்களால் தான் இலங்கை அன்று சுதந்திரமடைந்தது..நாளை தமிழீழம் கூட அப்படியானவர்களின் பக்களிப்பால் தான் மிளிரவும் போகிறது..! மிச்சம்..ஒட்டுண்ணிக் கூட்டம்..நாமும் தான்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

