02-08-2006, 12:13 PM
Thala Wrote:kuruvikal Wrote:இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கு..பிரித்தானியாவில் அனைத்து இணைய இணைப்புக்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று.காரணம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கடந்த வருடத்தில் முன்னையதை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்காம். சிறுவர்கள் கூட பாதுகாப்புப் பெறமுடியாத கீழ் நிலை மனித சமூக அமைப்பு தேவையா மனிதனுக்கு..???! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதை விட பாடசாலைகளில் கூட விடலைகள் பிறவுசிங் செய்ய தடை, அப்ப ரீச்சர் மாருக்கு பிள்ளைகளில் நம்பிக்கை இல்லையா...????
தல இது முற்றிலும் பிழையான தகவல், உங்கள் தகவலுக்கு ஆதாராமான மூலச் செய்தியை இணைக்க முடியுமா?
காரணம் நான் இங்கிருக்கும் ஒரு பாடசாலயில் தகவல் தொழில் நுட்பத்திற்கான ஆளுனராக இருக்கிறேன்.இவ்வாறன ஒரு செய்தியை நான் கேள்விப் படவில்லை.மாறாக இங்கிலாந்து அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைகளில் இணயப் பாவனையை இப்போது ப்ரோட் பான்டுக்குள்ளாக உள்ளூர் இணைப்பகத்தால் வழங்கி வருகிறது.அதில் சுயமாக கண்காணிப்பில் ஈடுபடும் செயலிகளை அமைதுள்ளது.அதோடு இந்தற்காக தனிப்பட பல மில்லியன் பவுன்ட்ஸ் களை ஒதுக்கி உள்ளது.
இன்ட்ராக்ட்ரிவ் வைட் போஅர்ட் அதாவது உருமாறும் வெள்ளைப் பலகை(?) மூலம் ஆசிரியர்கள் பாடங்களை இணயம் வழி பெறப்படும் காட்சிகள் ,செயலிகள் ,பாடங்களைக் கொண்டு நடத்தக் கூறிய வகையில் இப்போது பாடசாலைகளில் நிறுவி வருகிறது.இதன் மூலம் டிஜிடல் பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.இவை அனைத்துமே இணயம் மூலம் நடைபெறும் முயற்ச்சிகள்.ஆகவே அணியை உற்சாகப் படுதுகிறேன் என்று பிழயான தகவல்களை வழங்க வேண்டாம்.மேலும் தகவல்களை அறிய விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்புகளுக்குச் செல்லவும்.
http://schools.becta.org.uk/index.php?sect...&rid=10404&wn=1
http://www.becta.org.uk/corporate/publicat...tions/index.cfm


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 