02-08-2006, 10:16 AM
இவோன் Wrote:தயவு செய்து.. வெளிநாடுகளில் கிடைக்கின்ற வசதியும் வாய்ப்பும், தனி மனித வாழ்வை மேம்படுத்தக் கிடைக்கின்ற வாய்ப்பு, அங்கே எனக்கு இல்லை. அதனால் அங்கு செல்ல முடியாதுள்ளது என்ற உண்மையைச் சொல்லுங்கள்.. அது நேர்மை.. அதை விட்டுப் போட்டு.. தண்ணி நல்லம் .. காத்து நல்லம்.. ஆனா.. ஆச்சி விடுறாவில்லை என்ற சாட்டுக்களை சொல்லாதீர்கள்..
இதைத்தான் நானும் சொல்கிறேன் எங்கட நாட்டுக்கு நாங்கள் போகும் போது, குறுகிய காலத்தில் வசதிவாய்ப்பான நிலைக்கு உயர்த்துவது ஒண்று கடினமான விடயம் இல்லை........ ஒரு 6 மாத இங்கத்தைய உழைப்பு போதும் வசதியான வீடு, காற்றோட்டமான காணி, அன்பான அயலவர், கூப்பிட்ட குரலுக்கு ஒடிவரும் உறவுகள், கோவிச்சுக் கொண்டு எண்றாலும் போய் அமைதியாக இருக்கும் கோயில்..... முற்றத்தில் இருந்து மணம்தரும் மல்லிகை கனகாம்பரம்.... இப்படி எல்லாவற்றையும் இரண்டு வருடங்களுக்குள் மீள அமைச்சிடலாம்...!
இங்கு என்ன இருக்கிறது வெள்ளைக்காறனுக்கு உழைத்து கொடுப்பதை விட.....! ஓயாமல் உழைத்து வெள்ளையனை உயர்த்துவதைவிட , அவனுக்கு வரிப்பணமாய் எங்களின் உழப்பை வழங்குவதை விட தாய்நாட்டை உயர்த்துவது மேல்....!
<b>வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயரக் "கோ" உயர்வான்.....!</b>
::

