02-08-2006, 05:18 AM
இல்லதம்பி குறை நினைக்கவேண்டாம். என்னைப்போல பல வயதானவர்கள் தமிழீழத்தில் வாழவே விருப்பம். பலர் பிள்ளைகளுக்கு, கணவன்,மனைவிகளுக்குப்பயந்து விருப்பமில்லாமல் வெளினாடுகளில் வாழ்கினம். எனக்குத்தெரிந்த ஒருவர் 70 வயது இருக்கும். அவர் வைத்திய தாதியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வேலை செய்யவிருப்பம். ஆனால் அவரின் பிள்ளைகள் அவர் அங்கு போகத்தடுக்கிறார்கள். எதாவது வருத்தம் வந்தால் ஆர் பாப்பினம் என்று அவர்களின் பிள்ளைகள் கேக்கினம். எல்லாச்சொத்துக்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து,அவர்களிடம் கையெந்திக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற வயோதிபர்கள் தமிழீழத்துக்கு போகவிரும்பியும் மனைவி,கணவர்,பிள்ளைகளிடன் பேச்சுகளுக்கு எதிர்பேசாமலும் வெளினாடுகளில் வாழ்கினம்.

