02-08-2006, 04:27 AM
போனவருடம் வடதமிழீழத்துக்கு சென்றிருந்தேன். தமிழீல எல்லையில் இருந்து எங்கட பிள்ளைகள் அன்பாக வரவழைத்தவிதம், பாண்டியன் சுவையுற்று உணவு, யாழ்ப்பாணத்துத்தமிழ்,கிணத்துத்தண்ணீர், நான் பிறந்த ஊர்மக்களுடன் கதைத்தது, நான் அடிக்கடி போகும் பிள்ளையார் கோவில் இவற்றை எல்லாவற்றினையும் நான் இழந்து ஒஸ்ரேலியாவில் எதேற்கெடுத்தாலும் ஆங்கிலம் பேசியும், வெள்ளைக்காரரின் உணவுகள் உண்டும், இனிப்பில்லாத தண்ணீரும் குடித்து வாழுகிறேன். ஒஸ்ரேலியா வெய்யிலும், லண்டன் குளிரிலையும் எப்பவாவது யாழ்ப்பாணத்தில் பார்த்திர்க்கிறோமா?. வைகாசி மாதத்தில் சிலவேளை யாழ்ப்பாணத்தில் வேக்கும்.மற்றும் படி யாழ்ப்பாணக்காலனிலையினை அசைக்கமுடியாது?.எனது ஊர்மக்களிடம் கதைத்தபோது, அவர்களின் பேச்சு வழக்கு இப்பவும் என் காதில் ஒலிக்கிறது. இந்த அருமையான பேச்சு வழக்கத்தினை இனி நான் எப்ப கேப்பது?. பிள்ளையார் கோவில் திருவிழாவின் போது 10 நாட்களும் மணலில் இருந்து கடலைக்கொட்டை சாப்பிட்டுக்கொண்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு, பிரசங்கம் கேட்பது, இங்கை ஒஸ்ரெலியாவில் கேட்கமுடியுமா?. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கு யாழ்ப்பாணத்தில் தான் கடைசிக்காலத்தில் வாழ விருப்பம்.ஆனால் ஆச்சி இங்கை சொகுசு வாழ்க்கைக்குப்பழகிவிட்டா.
ஆனால் ஒரே ஒரு நிம்மதி, ஆச்சியிட்டை சொல்லிட்டேன். நான் இறந்தால் எனது உடலினை எறித்து சாம்பலினை கிரிமலைக்கடலில் கரைக்கவேண்டும் என்று. அப்பவாவது எனது மண்ணில் வாழ்வேன் என்ற ஒரு நம்பிக்கை.
ஆனால் ஒரே ஒரு நிம்மதி, ஆச்சியிட்டை சொல்லிட்டேன். நான் இறந்தால் எனது உடலினை எறித்து சாம்பலினை கிரிமலைக்கடலில் கரைக்கவேண்டும் என்று. அப்பவாவது எனது மண்ணில் வாழ்வேன் என்ற ஒரு நம்பிக்கை.

