02-06-2006, 11:07 AM
இவோன் Wrote:உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?
ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...
நான் கட்டாயம் போவேன் இவோன்...!
உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா....??? யாழ்ப்பாணத்தில் காணிகளின் விலை அதிகரிப்பு..! காரணம் இங்குள்ளவர்கள் அங்கு வீடுகள்.. காணிகள் வாங்குவதில் காட்டும் நாட்டம். நாணும் வெறும் காணி வாங்கி விட்டுட்டன்.... அதாவது மக்களின் மன வோட்டம் தாயகத்துக்கு திரும்பிப்போவது பற்றித்தான் இருக்கிறது இல்லாவிட்டால் எதற்காக காணிகள்....???
பணம் முக்கியம்தான்.. அதுக்காக பணமே வாழ்க்கை கிடையாது... இங்கு வியாபாரியாக இருக்கும் ஒருவன் சொல்லக்குடியது... என்னால் எங்கும் வியாபாரம் செய்யமுடியும்.... நான் கல்விகற்றதுறையில் தமிழீழத்தில் எனக்கு வேலை கிடைக்காது எண்று என்பதெல்லாம் வீண்பேச்சு தன்னம்பிக்கை இல்லாதவரின் வீண்வாதம்... தாயகம் திரும்புவோரில் எனது பெயரும் இருக்கிறது
::

