02-06-2006, 10:26 AM
<span style='font-size:25pt;line-height:100%'>அவுஸ்திரேலியாவில் விளையாட விரும்பவில்லை -முரளி</span>
<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2006/February/06/sp2.jpg' border='0' alt='user posted image'>
ரசிகர்களின் தொல்லையால் முரளி விரக்தி அவுஸ்திரேலியாவில் இனிமேல் விளையாட விரும்பவில்லையென இலங்கையின் முரளிதரன் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா பங்கு பெறும் முத்தரப்புத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. இத்தொடரில் ரசிகர்கள் முரளிதரனை நோக்கி <b>"நோபோல்' </b>என பல போட்டிகளில் கூச்சலிட்டனர். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனது பந்து வீச்சில் எந்தத் தவறும் இல்லை என சர்வதேச கிரிக்கெட் சபை முன்னால் நான் நிரூபித்துள்ளேன். விதிகளுக்கு புறம்பாக நான் பந்து வீசவில்லை. எனது பந்து வீச்சு போட்டிகள் மற்றும் பரிசோதனைக் கூடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் நான் பந்து வீசும் போது ரசிகர்கள் "நோபோல்' என கூச்சலிடுகின்றனர். நான் பவுண்டரியில் களத்தடுப்பு செய்யும்போதும் அதேபோல் கோஷங்கள் எழுப்புகின்றனர்.
மற்ற பந்து வீச்சாளர்கள் போல் தான் நானும். இனி வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய விரும்பவில்லை. ஆனால் இது தீர்க்கமான முடிவு அல்ல என்றும் முரளிதரன் தெரிவித்தார். இதேநேரம் முரளிதரனின் பந்து வீச்சில் எதுவித தவறுமில்லையென அவுஸ்திரேலிய நிபுணர்கள் மீண்டும் தெரிவித்துள்ளனர். முரளியின் பந்து வீச்சுகள் யாவும் குறிப்பிட்ட 15பாகைக்குள்ளேயே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
thinakkural

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>