02-06-2006, 09:14 AM
Quote:நாம் அவப்போது விடுமுறையில் எமது குடும்பத்த பார்க்க செல்வோமே தவிர அங்கு போய் யார் நிரந்தரமாக தங்குவது. நாங்கள் உள்ளதுகளை உள்ள படி தான் சொல்வோம்
உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?
ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...

