Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்-முஸ்லிம் நல்லுறவு பேணல் முயற்சிகள்
#4
<b>அம்பாறையில் விடுதலைப் புலிகள்- முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு </b>
[திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2006, 01:02 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினர்.


அதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:

இருசாராரும் இன்று முதல் ஒவ்வொரு மாதமும் சந்தித்து மக்களின் அன்றாட வாழ்க்கை வசதிகள், பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடி இயல்பு வாழ்கையை தொடர்ந்து பேணுவதுடன் தமிழ் - முஸ்லப்ம் உறவுகளை பேணிப் பாதுகாப்பது என்றும்,

தற்போது நிலவும் விவசாயச் செய்கை மற்றும் வியாபார தற்காலிகத் தொழில் புரிதல் சம்பந்தமாக நிலவும் இடையூறுகள் அனைத்தும் களையப்பட்டு இன்று முதல் தமிழ், முஸ்லீம் மக்கள் தத்தமது தொழில்களை இயல்பாக செய்வதென்றும் முடிவு காணப்பட்டது.

இரு சமூகங்களுக்குமிடையிலிருந்து குறிப்பிட்ட ஒரு சிலர் முரண்பாட்டாளர்களாக தொழிற்படுவதை இனங்கண்டு அவர்களை சமூகங்களிலிருந்து புறந்தள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்

தொடர்ந்து ஏற்படுத்தப்படும் சந்திப்புக்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த பிரமுகர்களை கலந்து கொள்ளச் செய்வதென்றும் அநாவசிய, நாகரீகமற்ற, முகவரியற்ற துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்வதோடு அவர்களை இரு சமூகங்களும் உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பாவட்டை அரசியல்துறைப் பணிமனையில் நான்கு மாதங்களுக்குப் பின் இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் விடுதலைப் புலிகள் சார்பில் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா, தளபதி ஜெனார்த்தனன் நிர்வாகப் பொறுப்பாளர் தொல்காப்பியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் முன்னிலையில் இச்சந்திப்ப்பு நடைபெற்றது
<i><b>
தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 09:10 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 08:22 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:01 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)