02-06-2006, 07:07 AM
Quote:முகத்தார் : இந்த அரபி நாட்டுக்காரங்கள் இவங்களை அடிமைகள் போலத்தான் நடத்துறாங்கள் கண்டியோ . . 18மணிநேர வேலை சரியான சாப்பாடு இல்லை வெறும் 10000 ரூபாதான் மாதச்சம்பளம் அதுவும் சில இடங்களிலை ஒழுங்கில்லை இதோடை பாலியல் தொல்லைகள் வேறை பாவமடா. . .மத்திய கிழக்கில் இருந்து திரும்பிய பல பெண்களின் கண்ணீர் கதைகள் இவ்வாறே இருக்கின்றன. முதலில் ஒப்பந்தம் செய்யும் போது தங்குமிடம், உணவு, போக்குவரத்து என்பவை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறுவார்கள். பின் பணிப்பெண்களிற்கான சம்பளமும் ஒழுங்காக வழங்காமல் பல வேலைச் சுமைகளையும் வழங்கி உணவு கூட வழங்காமல் அவர்களை வைத்திருந்து திருப்பி அனுப்புகிறார்கள்.
Quote:முகத்தார் : எங்கடை யாழ்ப்பாணத்துச்சனம் பெரிசா போறேலைதான் ஆனா கிழக்கு மாகாணத்து தமிழ் சனங்கள் அங்கையிருக்கிற முஸ்லீம் ஏஜென்சிகளை நம்பி பேரை மாத்தி போறது என்னவோ நடந்தபடிதான் இருக்கு
யாழ்ப்பாண மக்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு போகாததற்கு பல காரணங்கள். ஆரம்ப காலங்களில் யாழ்சமூகம் கல்வியுடன் தன்னை இணைத்திருந்தது. இதற்காக மற்றைய மாவட்ட மக்கள் கல்வியறிவு பெறவில்லை என்பதல்ல. ஒரு காலப்பகுதியில் முழு இலங்கைத்தீவிலும் யாழ்மாவட்டம் கல்வியில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தது. அதன் பின் இன்று புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் இருக்கும் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் யாழ்பாணத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்களிற்கு தம் பொருளாதாரத்தினை வளப்படுத்த மேற்குலகில் யாராவது ஒரு உறவு இருக்கிறார். ஆனால் கிழக்கு மாகாண மக்களையோ அல்லது மலையக மக்களையோ எடுத்துப் பார்ப்போமானால் இம்மக்களிற்கு யாழ்மக்களைப் போல் மேற்கு நாடுகளை அடைவதற்கு பொருளாதாரம் இடம்கொடுப்பதில்லை. இருந்தபோதிலும் அனைவரிற்கும் இருப்பது போன்ற தம் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஆவல் அவர்களிற்கும் இருக்கிறது. இதனை மிக இலகுவாக வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி இயங்கும் நிறுவனங்கள் தமக்கு சாதகமாக மாற்றி விளம்பரங்களின் மூலம் இவர்களைக் கவர்கிறார்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களின் கவர்ச்சியில் இவர்கள் மயங்குவது ஒன்றும் வியப்பில்லை. காரணம் மிக குறைந்த செலவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதுவே அப்போது அவர்களிற்கு தெரிகிறது.
Quote:சின்னப்பு : எல்லாம் இந்த பகட்டுவாழ்க்கைக்;கு ஆசைப்பட்டுத்தான் முகத்தான் தெரியாம கேக்கிறன் இப்பிடி சிலவேளை சீரழிஞ்சு போய் வாற பிள்ளைகளின்ரை நிலை என்ன?சீரழிஞ்சு போய் வரும் பிள்ளைகளின் நிலமை என்பது மிகவும் இக்கட்டான நிலமை. வீட்டாரிடமும் சொல்ல முடியாது மனவேதனை. சொன்னால் தம்மை வீட்டாரும் இச்சமூகம் ஏற்குமா என்னும் அச்சம். இதற்குப் பயந்து தமக்கு நடந்தவற்றை வெளிச்சம்போட பலர் முன்வருவதில்லை. தம் மனத்தினுள்ளே தம் சுமைகளை சுமந்து வாழ்வில் ஒருவித பற்றின்றி வாழ்கிறார்கள்.
அடுத்த ஒரு விடயம் எல்லோரும் இந்த பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போவதில்லை. இவ்வாறு மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாகச் செல்லும் பல பெண்களின் குடும்பங்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது. அவர்களில் பலரிற்கு வீட்டில் எமது சமூக்கட்டமைப்பில் குடும்ப வருவாய்க்கு மூலகாரணமாக இருக்கும் ஆண் இருக்கமாட்டார். அல்லது அப்படி இருப்பவர்களும் தொழில் செய்யாதவர்களாக சோம்பேறிகளாக வீட்டிலே இருப்பவர்களாக இருக்கிறார்கள். இவற்றைப் பார்க்கும் பெண்கள் தம் குடும்பத்தைக் காப்பாற்ற தாம் உழைக்க புறப்படுகிறார்கள். இப்பெண்களிற்கு தம் தாய் நாட்டில் 10,000 உரூபாவிற்கு வேலைபெறுவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. ஆதலால் அவர்கள் விளம்பரங்களில் காணப்படும் பெரும் சம்பளம், இலவச தங்குமிடம், இலவச போக்குவரத்து என்பவற்றை பார்த்து அதனைத் தம் தெரிவாகக் கொள்கிறார்கள்.
Quote:முகத்தார் : வீட்டிலை தெரியாத மட்டும் பிரச்சனையில்லை வீட்டுக்கோ அல்லது புருஷனுக்கோ தெரிய வரேக்கை வீட்டாலை கலைக்கப்படுகினம்; இப்பிடி போற சனம் வயித்துப்பாட்டுக்காக விபச்சார தொழிலில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியது மருதானை லொஜ்சுகள் சிலதிலை இருக்கிற விலைமாதர் அனேகரின் பிண்ணனி வெளிநாட்டு வாழ்க்கையாம் இது எனக்கெப்பிடித் தெரியும் எண்டு கேக்காதை கேள்விப்பட்டதைச் சொல்லறன்
இது மத்திய கிழக்கிற்கு போகும் பெண்களிற்கு மட்டுமில்லை, அவ்வாறு போக எண்ணி முகவர்களிடம் தம் பணத்தைப் பறிகொடுத்த பெண்களிற்கும் பொருந்தும். சிறுகச் சிறுக சேமித்த பணம், இது போனால் கூட பரவாயில்லை. கடன்வாங்கி கொடுத்த பணம். அதற்காக கொடுக்கவேண்டிய வட்டி. மீண்டும் ஊர் போக முடியாமை. இப்படி பல காரணங்கள் இப்பெண்களை இங்கு கொண்டுவந்து விடுகிறது. அதனைவிட தொழில்முகவர்களாக தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் அப்பெண்களை இங்கு அழைத்துவந்து வெருட்டி பயம்காட்டி அவர்களை அடைத்து வைத்து இத்தொழிலில் ஈடுபடுத்தி அதன் மூலம் தாம் பணம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு பாதாள உலகக்குழுக்களினதும், இலங்கைக் காவற்றுறையினதும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது. இப்படியான நிலையை ஒருபெண் அதிலிருந்து தப்பி துணிந்து வெளியே கூறினாலும் அவளை அழித்து விடுவதற்கு பலர் வெளியே இருக்கிறார்கள்.
<b>
...</b>
...</b>


