Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலா சோல்கைம் நாளை முக்கிய சந்திப்பு
#2
நோர்வே நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் சமா தான சிறப்புத் து}துவருமான எரிக் சொல்ஹெய்ம் இன்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மதியு ரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களை லண்டனில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெனிவாவில் நடைபெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சுக்களை எந்த நாட்களில் நடத்துவது என்பது தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காகவே இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவா பேச்சுக்களை நடத்துவதற்குரிய நாட்கள் பற்றி சிறீலங்கா அரச தரப்பின் தெரிவுகள் பற்றி முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்கு எரிக் சொல்ஹெய்ம் இந்தச் சந்திப்பில் தெரியப்படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
! ! !!
Reply


Messages In This Thread
[No subject] - by DV THAMILAN - 02-06-2006, 02:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)