02-05-2006, 12:00 PM
MUGATHTHAR Wrote:<b>கிருலப்பனையை கலக்கும் \"கிறீஸ்\" ஆசாமிகள் </b>
<i>மடக்கிப் பிடிக்கும் முயற்சியில் பொது மக்கள் </i>
கொழும்பு கிருலப்பனையில் கிறீஸ் தடவிக் கொண்டு இரவில் நடமாடித் திரியும் மர்மக் கும்பல் ஒன்றினால் பெண்களிடம் பெரும் பீதியேற்பட்டுள்ளது.
இக் கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளவர்களில் ஒரு சிலர் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை இக்கும்பலை மடக்கி பிடிக்க ஆண்கள் இரவில் காவல்காத்து வருவதாகவும் பொலிஸார் கிறீஸ் ஆசாமிகளை பிடிக்க வலை விரித்துள்ளரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரகாலமாக கிருலப்பனையிலுள்ள பல இடங்களில் நால்வர் அடங்கிய கிறீஸ் ஆசாமிகளிடம் பெண்கள் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மேலும் சிலர் நடந்தவற்றை வெளியே தெரிவிக்க முடியாமலுள்ளனர்.
குறிப்பாக தனிமையில் இருக்கும் பெண்களும் தங்குமிடங்களில் உள்ள பெண்களுமே அதிகளவில் கிறீஸ் ஆசாமிகளின் சேஷ்டைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நடமாடி வரும் இக் கும்பல் எவரிடமாவது மாட்டிக் கொள்ள நேரிட்டால் தப்பிச் செல்ல கைகளில் கத்தியை வைத்திருப்பதாகவும் அதே கத்தியை காட்டி மாட்டிக் கொள்ளும் பெண்களிடம் தமது சேஷ்டைகளை புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெண்களை பெரும்பாடாய் படுத்தி வரும் இக் கும்பலைச் சேர்ந்த ஆசாமிகளை பிடிப்பதில் கடந்த இரண்டு தினங்களாக கிருலப்பனை பொது மக்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதும் இந்த விடயம் குறித்து தெரிந்து கொண்ட அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்
<b>தினக்குரல்</b>
SUNDHAL Wrote:அதான் கைவசம் நான் எண்ணெய் கொண்டு போறனான் திறத்தினா ஊத்திட்டு ஒட.......
<b>தம்பி சுண்டல் இப்பிடி ஒரு செய்தி அவுஸ்ரேலியா பேப்பர்களிலை வராமல் பாத்துக்கொள்ளும்.....அப்பு </b>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

