02-05-2006, 11:55 AM
Mathan Wrote:சுதந்திர தினத்தன்று தமிழர்களின் எதிர்ப்பை காட்டுவதற்காக தேசிய கொடியில் இரசாயன கலவை ஒன்றை பூசி வைத்து அது ஏற்றப்படும் போது தீப்பிடித்து எரிந்த சம்பவம் நீண்ட காலத்துக்கு முன் நடைபெற்றிருக்கின்றது. இதனை நான் புத்தங்களில் படித்தேன். இது எப்போது நடந்தது யார் செய்தது என்பதை தெரிந்தவர்கள் நினைவுள்ளவர்கள் சொல்லுங்கள்.
தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு 1978ல் சிறிலங்காவில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ஜேர்.ஆர்.ஜயவர்த்தனா பதவியேற்றபோது அதற்கு மதிப்பளிக்க திருகோணமலை இந்துக் கல்லூரியில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியினுள் பொஸ்பரஸை வைத்து அதனை எரியச் செய்தவர் உயர்தர மணவரான சார்ள்ஸ் அன்ரனி.அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. சார்ள்ஸ் அன்ரனியும் இன்னும் இரண்டு மாணவர்களும் இதிலே சம்பந்தப்பட்டிருந்தார்கள்; மற்ற இருவருக்கும் எதேச்சையாக இதிலே அகப்பட்டுக் கொண்டார்கள். அதிபரும் தேசியக் கொடியினைக் குடியரசுதினத்தன்று கட்டுவதற்குப் பொறுப்பாக இருந்த இன்னோர் ஆசிரியரும் (அவர் மேற்கூறிய மாணவர்களிலே ஒருவரின் தந்தை) இம்மாணவர்களோடு இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான். அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.)

