Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜொள்ளு பூசாரி கை நீளவே பெண்களே தந்தனர் செருப்படி
#1
அனுமான் கோயிலில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தவறாக நடக்க முயன்ற பூசாரியை, கோயில் வெளியே இழுத்துப்போட்டு, பெண்களே செருப்படி தந்தனர்.

ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் முதாப்பள்ளி என்ற பகுதியில் பிரபலமான அனுமான் கோயில் உள்ளது. அங்கு பூசாரியாக இருப்பவர் சேகர். வயது 35. கோயிலுக்கு முக்கிய விசேஷ நாட்களில், பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

உள்ளூரில் பெண்கள் அடிக்கடி கோயிலுக்கு வருவர். அப்படி வந்து கொண்டிருந்தவர் தான் இந்த 25 வயது பெண். அவர் கணவர், சமீபத்தில் தான் துபாயில் வேலை கிடைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் பற்றிய விவரம் எல்லாம் அடிக்கடி பூசாரியிடம் சொல்லி, கடவுளிடம் வேண்டிக்கொண்டு கிளம்புவார்.

இப்படி பழக்கத்தை வைத்துக்கொண்ட பூசாரியிடம், திடீர் என்று "ஜொள்ளு' பூதம் கிளம்பிவிட்டது போலும். குங்குமம் தருவது போல, அடிக்கடி கையை பிடிப்பார். அதனால் நெளிந்து போய்விடுவார் பெண். ஏதேச்சையாகத்தான் இப்படி நடக்கிறது என்று நினைத்திருந்தார் பெண். ஆனால், கையை தொட்டும் எதுவும் மறுப்பு சொல்லவில்லையே என்று அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார்.

அனுமான் பிரசாதம் என்று சொல்லி அடிக்கடி, வடைகளை கொண்டு கொடுத்துவிட்டு, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க நேரம் பார்த்தார். ஒரு நாள், குடிக்க தண்ணீர் கேட்டு, திரும்பி வரும் போது, பெண்ணை கட்டிப்பிடித்து விட்டார்.

பெண் கத்தவே, பூசாரி, கமுக்கமாக வெளியில் தப்பிச்சென்று விட்டார். இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று போலீசில் புகார் செய்தார் பெண். ஆனால், போலீசாரிடம் பூசாரி சரிகட்டவே, அவர்கள் புகாரை எடுக்கவே இல்லை.

இதை அறிந்த பெண், சிலரின் உதவியோடு, உள்ளூர் பெண்கள் அமைப்பான "ஸ்வசக்தி'யிடம் புகார் செய்தார். அவ்வளவு தான், அந்த பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லாம் திரண்டு, கோயிலில் இருந்து பூசாரியை இழுத்து வந்து விட்டனர். கோயில் வாசலில் நிறுத்தி, ஆளாளுக்கு செருப்படி தந்தனர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஆண்கள் பலரும் விக்கித்துப் போய்விட்டனர். பூசாரியை அடிப்பதை தடுக்கவில்லை. பெரும் பதட்டம் காணப்படவே போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் பூசாரி தப்பி ஒடிவிட்டார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
ThanksBig Grininamalar........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
ஜொள்ளு பூசாரி கை நீளவே பெண்களே தந்தனர் செருப்படி - by SUNDHAL - 02-05-2006, 05:12 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 05:15 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 05:17 AM
[No subject] - by kuruvikal - 02-05-2006, 05:19 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 05:21 AM
[No subject] - by SUNDHAL - 02-05-2006, 05:28 AM
[No subject] - by kuruvikal - 02-05-2006, 05:30 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 05:32 AM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 05:39 AM
[No subject] - by kuruvikal - 02-05-2006, 05:44 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 05:48 AM
[No subject] - by SUNDHAL - 02-05-2006, 05:52 AM
[No subject] - by kuruvikal - 02-05-2006, 05:56 AM
[No subject] - by SUNDHAL - 02-05-2006, 05:58 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 06:00 AM
[No subject] - by kuruvikal - 02-05-2006, 06:00 AM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 06:02 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 06:03 AM
[No subject] - by kuruvikal - 02-05-2006, 06:09 AM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 06:17 AM
[No subject] - by RaMa - 02-05-2006, 07:07 AM
[No subject] - by SUNDHAL - 02-05-2006, 09:13 AM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 10:07 AM
[No subject] - by SUNDHAL - 02-05-2006, 12:00 PM
[No subject] - by MEERA - 02-05-2006, 12:05 PM
[No subject] - by MEERA - 02-05-2006, 12:05 PM
[No subject] - by SUNDHAL - 02-05-2006, 12:53 PM
[No subject] - by Birundan - 02-06-2006, 12:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)