Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலர் தினத்தில் காதல் துரோகி!
#1
<b>காதலர் தினத்தில் காதல் துரோகி!


<img src='http://img137.imageshack.us/img137/8996/kathalvariss9sb.gif' border='0' alt='user posted image'>

ட்ரீம்ஸ் வேர்ல்டு பர்சன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் "காதல் துரோகி'. இப்படத்தைப் பற்றி அதன் டைரக்டர் எம். பூமானிடம் கேட்டோம்.

""இது ஒரு வித்தியாசமான காதல் கதை. படத்தின் தலைப்பை பார்த்த உடனேயே நீங்கள் இதுதான் கதை என்று யூகித்திருந்தால்... அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! இதுவரை காதலை எத்தனையோ படங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

நண்பர்களை உயிருக்கு உயிராக நேசிக்கிற ஒருவன் தன் நண்பர்கள் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் காதல்களைப் பிரிக்கிறான். ஒரு கட்டத்தில் அவனே காதல் வயப்படும்போது, காதலின் வலியையும், ஃபீலிங்கையும் உணர்ந்து வருத்தமடைவதுடன் பிரித்த காதலர்களைச் சேர்த்து வைக்கிறான். இதுதான் படத்தின் கதை.

ஹீரோவாக விஜய்சிங், ஹீரோயினாக ஹேமலதா அறிமுகமாகிறார்கள். ஹேமலதா ரஜினி ஸôரின் "பாட்ஷா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, "காதல் கொண்டேன்' வரை பல படங்கள் பண்ணியிருக்கிறார்.

கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், சென்னை உள்பட பல இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறோம். படத்தின் கேமராமேன் ஷ்யாம். வேலுபிரபாகரன், தர்மா இவர்களிடம் உதவியாளராக இருந்தவர். ஆதிஷ் இசையமைத்திருக்கிறார். ஒரு பாடலை ஊட்டியில் படமாக்கி உள்ளோம்.

படத்தில் மொத்தம் மூன்று ஹீரோ, ஹீரோயின்கள். நெல்லை சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஷகீலா கூட்டணியின் காமெடி படத்தின் ஹைலைட்ஸ். பாடல்களை நானும், ஜெய். தங்கராஜும் எழுதியுள்ளோம்.

படத்தை நான் டைரக்ட் செய்திருப்பதோடு எனது நண்பர் ஜெய் தங்கராஜுடன் இணைந்து தயாரித்துள்ளேன்.

"சங்கர் குரு' படத்தின் டைரக்டர் எ.எம். ராஜா, எடிட்டர் ஜெயசந்திரன் ஆகியோர்களிடம் அசிஸ்டெண்ட்டாக வொர்க் பண்ணிய அனுபவம் எனக்கு உண்டு. எம்.ஜி. ஆரின் வாரிசு சந்திரன் இதில் நடிக்கிறார்.

இது ஒரு காலேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளைஞர்கள் விரும்புகிற மாதிரி படமாக்கி உள்ளோம். இது காதல் படம் என்றாலும்கூட படத்தில் டூயட்டுகள் கிடையாது. இதில் போலீஸ் கேரக்டர்கள் கிடையாது. அபிநயஸ்ரீ ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

""குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்துள்ளோம்'' என்றார்
cinemaexpress.com
விடுப்பு : .</b>
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
காதலர் தினத்தில் காதல் துரோகி! - by Rasikai - 02-04-2006, 10:50 PM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 06:06 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 01:38 PM
[No subject] - by வினித் - 02-05-2006, 02:52 PM
[No subject] - by Mathuran - 02-05-2006, 04:30 PM
[No subject] - by தூயவன் - 02-06-2006, 05:02 AM
[No subject] - by Niththila - 02-06-2006, 02:41 PM
[No subject] - by தூயவன் - 02-06-2006, 02:47 PM
[No subject] - by Niththila - 02-06-2006, 03:07 PM
[No subject] - by தூயவன் - 02-06-2006, 03:13 PM
[No subject] - by Niththila - 02-06-2006, 03:20 PM
[No subject] - by vasanthan - 02-06-2006, 04:09 PM
[No subject] - by Niththila - 02-06-2006, 04:21 PM
[No subject] - by vasanthan - 02-06-2006, 04:28 PM
[No subject] - by Niththila - 02-06-2006, 04:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)