Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்காவின் சுதந்திர நாள்
#1
சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டம் என்கிற பெயரில் சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் போருக்கான ஒத்திகையை நடத்தியுள்ளன.

சுதந்திர நாள் உரையாற்றிய பின்னர் அரச தலைவர் மகிந்த ராஜபக்சஇ இராணுவத்தினரது அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இது வழமையான ஒரு நடவடிக்கையாக இருப்பினும் இராணுவ அணிவகுப்பு தொடர்பாக சிறிலங்காவின் தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்த வர்ணணையாளர்இ "நிலத்திலும் கடலிலும் வானிலும் நாங்கள் பலமானவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது எங்கள் இராணுவ அணிவகுப்பு" என்று கூறியுள்ளார்.


சிறிலங்கா விமானப் படையின் எம்.ஐ.-24 ரக விமானமும் தாக்குதல் உலங்கு வானூர்திகளும் இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர் ஜெட் விமானங்களும் அணிவகுத்தன.

இவை அனைத்துமே 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்பாக தமிழர்கள் மீது பாரிய தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.



அதேபோல் 2000 ஆம் ஆண்டு யாழ். சமரில் பயன்படுத்தப்பட்ட செக் தயாரிப்பு மல்ரி பரல் ரொக்கெட் லோஞ்சர்களும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.

சிறிலங்கா சுதந்திர நாளையொட்டி 25 குண்டுகளுடன் மரியாதை செலுத்தப்பட்ட பின்பு அந்நாட்டுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய கடற்படை அதிகாரி ஜி.கே. தசாநாயக்கஇ "நாங்கள் இப்போது முழுப் பலத்துடன் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.


காலி முகத்திடலில் நடைபெற்ற சுதந்திர நாளில் உரையாற்றிய மகிந்த் ராஜபக்சஇ நாம் எந்த ஒரு தீர்வையும் பலவந்தமாக திணிக்கமாட்டோம். எமது அமைதி முயற்சிகள் வெளிப்படையாக இருக்கும். அதே நேரத்தில் எந்த ஒரு தரப்பிலிருந்தும் விடுக்கப்படுகிற அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டோம்" என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

இந்த ஆவேச முழக்கத்துக்கு நேர் எதிராகஇ இன்னும் சில நாள்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நாங்கள் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்தப் போகிறோம் என்றும் மகிந்த தெரிவித்தார்.

நன்றி - புதினம்
Reply


Messages In This Thread
சிறிலங்காவின் சுதந்திர நாள் - by ukraj - 02-04-2006, 07:14 PM
[No subject] - by ukraj - 02-04-2006, 07:16 PM
[No subject] - by ukraj - 02-04-2006, 07:18 PM
[No subject] - by ukraj - 02-04-2006, 07:25 PM
[No subject] - by ukraj - 02-04-2006, 07:36 PM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 04:33 AM
[No subject] - by ukraj - 02-05-2006, 08:37 AM
[No subject] - by தூயவன் - 02-05-2006, 01:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)