Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம்பெற இந்தியாவிற்கு தார்
#1
<b>ஐ.நா.</b> <b>பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம்பெற இந்தியாவிற்கு தார்மிக உரிமை உள்ளது பிரதமர் மன்மோகன் சிங் </b> புதுடில்லி,

""ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற இந்தியாவுக்கு தார்மிக உரிமை உள்ளது. சர்வதேச கடமை, பொறுப்பு, திறன் போன்றவற்றால் உலக நாடுகள் இந்தியாவை அங்கீகரிப்பது அதிகரித்து வருகிறது. எனினும், நிரந்தர இடம்பெறுவதில் சில தடைகள் உள்ளன'' என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார்.
நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் அளித்த பதில்கள் வருமாறு:
வெளியுறவு மற்றும் தேசியப் பாதுகாப்புத் துறைகளில் இந்த அரசு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த நட்புணர்வுடன் அணுகச் செய்வதற்கு எங்கள் அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீனா, பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேம்பட்டுள்ளது.
தேசிய நலனில் அக்கறையுடன் சிறப்பான வெளியுறவுக் கொள்கையுடன் மத்திய அரசு செயல்படுகிறது. காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பாகிஸ்தானுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது.
உலகில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேம்பட்டுள்ளது.
குறிப்பாக ஆசிய நாடுகள், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடன் உறவு மேம்பட்டுள்ளது. சர்வதேச வளர்ச்சி நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பும் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு குழுவின் விரிவாக்கத்தில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற இந்தியாவுக்கு தார்மிக உரிமை உள்ளது. சர்வதேச கடமை, பொறுப்பு, திறன் மற்றும் செயல்பாடுகளால் நம் நாட்டை உலக நாடுகள் பல அங்கீகரித்துள்ளன. எனினும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதில் சில தடைகள் உள்ளன. சர்வதேச அணுசக்தி விவகாரத்தில் மத்திய அரசு பணிந்து போவதாக கூற முடியாது. இதில் நாங்கள் தெளிவான நோக்கங்களை கொண்டுள்ளோம். இதில் மிகுந்த கவனத்துடன் குறைந்தபட்ச எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவோம். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
ஆக்கபூர்வ அணுசக்தி தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த அரசு ஆர்வம் கொண்டுள்ளது. இதன் மூலம் அணுசக்தி பாதுகாப்பு மேலும் உறுதிப்படும்.
ஈரான் விவகாரத்தை பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியாகவே இதற்கு நாம் தீர்வு காண வேண்டும் என நான் நம்புகிறேன். ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே, தனது சர்வதேச கடமையை ஈரான் முழுவதுமாக நிறைவேற்றியாக வேண்டும் என்றார்.


http://www.virakesari.lk/VIRA/html/int_vie...iew.asp?key=170
Reply


Messages In This Thread
ஐ.நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம்பெற இந்தியாவிற்கு தார் - by வினித் - 02-03-2006, 09:24 PM
[No subject] - by Raguvaran - 02-03-2006, 10:10 PM

Forum Jump:


Users browsing this thread: