01-28-2004, 11:04 AM
என்னைப்பற்றின ஏதோ ஒரு பயம்தான் சில பேரை அப்படி பேச வைக்குது. படத்துக்கு சம்பந்தமே இல்லாம திடீர் திடீர்னு எவன்டா தலை?னு என்னை காயப்படுத்தணும்னு வசனம் பேசுறாரு ஒரு ஹீரோ! நான் இதுவரைக்கும் அதுக்கு பதில் சொன்னதில்லை. என் படங்களில் அப்படி வசனம் சேர்த்ததில்லை. ரெண்டுல ஒண்ணு பார்த்திடணும்னு என் ரசிகர்கள் கூடக் கொந்தளிக்கிறாங்க. நானும் ஆவேசப்பட்டு அதுக்கு பதில் சொல்ற மாதிரி என் படங்களில் வசனம் சேர்க்கட்டுமா? அப்படி சேர்த்தா என்னாகும்? ரெண்டு பேரோட ரசிகர்களும் வெட்டு குத்துன்னு இறங்கிருவாங்க. எனக்கு அப்படி நடந்துக்கறதிலே கொஞ்சம் கூட சம்மதமில்லை. என்னால வாழ்ந்தவன்னு யாரும் இல்லேன்னாலும் பரவாயில்லை. அஜீத்னால கெட்டவன்னு யாரும் இருக்கக் கூடாது. அந்த அமைதி வேணும். அஞ்ச கிலோ அரசி கொடுத்திட்டு பேப்பர்ல போட்டோ போடுற பப்ளிசிட்டியும் எனக்கு தேவையில்லை. யாராவது வெட்டி குத்தி செத்ததும் அம்பதாயிரம் ரூபா கொண்டுபோய் கொடுக்கிற துரதிருஷ்டமும் எனக்கு வேணாம். ஆனால் தப்பு தப்பா என்னை சீண்டிப்பார்க்கிற அந்த மாதிரி சேட்டைகள் தொடர்ந்தால்...? வேணாம்... அந்த விளையாட்டை விட்டுடறதுதான் நல்லது! -விஜய் குறித்து 25-1-2004 ஆனந்த விகடன் இதழில் அஜீத்
