Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
1400 பேருடன் அமிழ்ந்தது கப்பல்
#4
சவுதி அரபியாவின் டூபா துறைமுகத்திலிருந்து எகிப்து நோக்கி 1406 பேருடன் சென்ற அல் - சலாம் 98 என்ற எகிபது நாட்டிற்குச் சொந்தமான பயணிகள் கப்பல் செங்கடலில் மூழ்கியுள்ளது. இதனால் மிகப்பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவி;க்கின்றன.

1310 பயணிகளுடனும்இ 96 கப்பல் பணியாளர்களுடனும் சவுதி அரபியாவின் டூபா துறைமுகத்திலிருந்து சென்ற மேற்படி கப்பல் அதிகாலை 2.00 மணியளவில் எகிப்தின் சபாகா துறைமுகத்தை சென்றடைய இருந்தது. இரவு 10.00 மணிவரை கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் கப்பலிற்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும் அதன் பின்னர் ரேடார் திரையிலிருந்து கப்பல் மறைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பல் மூழ்கியதற்குரிய காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. குறித்த கடற்பகுதியில் கடும்காற்றுடன் மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப்பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த பலரின் சடலங்கள் கடலில் மிதப்பதாக பிந்திக்கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன


http://www.sankathi.com/
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 02-03-2006, 01:51 PM
[No subject] - by kuruvikal - 02-03-2006, 02:36 PM
[No subject] - by shanmuhi - 02-03-2006, 03:07 PM
[No subject] - by Mathan - 02-04-2006, 05:12 AM
[No subject] - by Mathan - 02-04-2006, 05:30 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 06:08 AM
[No subject] - by Mathan - 02-04-2006, 06:11 AM
[No subject] - by MUGATHTHAR - 02-04-2006, 06:40 AM
[No subject] - by MUGATHTHAR - 02-08-2006, 12:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)