02-03-2006, 11:14 AM
Quote:வர்ணன் நீங்கள் சொல்வது உண்மை. அடுத்த முறை பட்டிமன்றத்தை அறிமுகப்படுத்துபவர்கள் 5 கட்டுப்பாடுகள் என்றாலும் முன் வைத்து தொடங்கவும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அணியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று அறிவித்தால் இப்படியான வறட்டு கெளரவங்கள் பிடிவாதங்கள் இல்லமால் போகும்.
யாருக்காவது வாதம் வைக்க வேணும் என்றால் நானும் தயார். நடுவர்களின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் எமக்கு சலிப்புத்தன்மை தான் ஏற்படுகின்றது.
நல்ல யோசனை...அணிகள் மீதான கட்டுப்பாடுகளோடு. அணித்தேர்வின் போது சுயவிருப்பங்கள் அறியப்பட வேணும்..அத்தோடு அணிகள் நீண்டதாக இருப்பதும் நல்லதல்ல.( அணிக்கு 6 -7 பேர் போதும்).! குறைந்தது இரண்டு கிழமைக்குள் விவாதத்தை முடிக்க கூடியதாகச் செய்ய வேண்டும்...! இதுவரை விவாதத்தில் கலந்து கொள்ளாத பலருக்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்..! பட்டிமன்றத்தை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பதுதான் சுவாரசியமாக கருத்து வைக்க உதவும். இப்போ உதாரணத்துக்கு இங்க டிசம்பரில் வைத்த கருத்துகளை மீள போய் படிச்சுத்தான் கருத்தெழுத வேண்டும்...அது சலிப்பான விடயம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

