Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது சிறுவன்
#3
மிகவும் வேதனைக்குரிய மேலதிக தகவல்கள்

அந்தச் சிறுவனின் கண் பாதிப்புக்கு உண்டாகி 6 மாதங்கள் ஆகிறது. இன்று காசை சேர்த்துக் கொடுத்தாலும் வைத்தியர்கள் கூறிவிட்டார்கள், சம்பந்தப்பட்ட நரம்புகள் இறந்துவிட்டதால் சத்திரசிகிச்சை செய்வதில் பலன் இல்லை என்று.

அந்தச் சிறுவனின் தாயின் ஆதங்கம் <b>தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்றவர்கள் கடனாக ஆயினும் அந்த 2 லட்சத்தை தந்து உதவ முன்வரவில்லை</b> என்று.

<b>கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கம் அவர்களது உதவி கேரிக்கையை பரந்துபட்ட அளவில் இணைய ஊடகங்கள் மூலமும் கேட்டிருந்தால் உதவி நேரத்திற்கு சென்றடைந்திருக்கும்</b>.

இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்காலத்திலாவது இந்தப் பிழையினை மீண்டம் விடாமல் பார்த்துக் கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிப்பார்கள் என நம்புவோம்.

கண் பார்வை, காது கேட்டல், பேச்சு போன்றவை எல்லோருக்கும் மிகவும் அடிப்படையான தேவை. அதுவும் ஒரு 5 வயதுச் சிறுவனின் ஒரு கண் பார்வை முற்றாக இழந்தும் மற்றய கண்பார்வை ஏற்கனவே குன்றிய (வயது செல்ல செல்ல 1 கண்ணால் எல்லாவற்றை அவதானிப்பதால் வரும் stress ஆல் அந்தப்பார்வையும் நடுத்தர வயித்திலே அதற்கு முதலேயோ மேலும் பாதிக்கபட்டுவிடும்) எதிர்காலத்திற்கு காரணம் 2லட்சம் ரூபாய்கள் தட்டுப்பாடு என்பது ஒரு மிகவும் கேவலமான நிலை. அந்தச் சிறுவன் எதிர்காலத்தில் எப்படியான ஒரு பங்களிப்பை எமது சமுதாயத்திற்கு தந்திருக்க முடியும்?

ஜரோப்பாவில் மாத்திரமே ரிரிஎன் (தொலைக்காட்சி) ஜபிசி (வானொலி) போன்றவர்களினால் பொருத்தமான முறையில் அறிவிப்பு செய்து உதவியிருந்தால் 2..3 நாட்களில் 1200 GBP (1700 EURO) சேர்க்க முடியாத பிச்சைக்காரர்களாகவா எம்மவர்கள் இங்கு இருக்கிறார்கள்?

எமது ஊடகங்கள் மக்களின் இது போன்ற தேவைகளை முன்னுரிமை கொடுத்து பொறுப்பாக செயற்பட வேண்டும்.
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 01-27-2006, 07:49 PM
[No subject] - by kurukaalapoovan - 02-03-2006, 10:37 AM
[No subject] - by kurukaalapoovan - 02-04-2006, 12:08 AM
[No subject] - by aathipan - 02-04-2006, 12:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)