02-03-2006, 06:50 AM
varnan Wrote:செல்வமுத்து ஆசிரியர் அவர்களே-
நான் சொல்ல வருவது சரியோ பிழையோ தெரியல!-ஆனால் - நடுவராயிருக்கும் நீங்கள்- கட்டளையிடும் அதிகாரத்தை கொண்டிருக்கிறீர்கள் - எண்டு நம்புறேன் -!
ஆகவே- ஏறக்குறைய பட்டிமன்றம் முடியும் நிலையில் இருக்கு- சோ -
நீங்களே இவர்தான் இப்போ கருத்து வைக்கணும் எண்டு சொல்லுங்க- முடியாது என்று சொல்லவந்தால்- அவரை இந்த விவாத அணியிலிருந்து நீக்கி விடுங்க-
அடுத்தவருக்கு வழி விடுங்க- சும்மா சில பேரின்ர வறட்டு கெளரவத்தால- ஆர்வத்துடன் இந்த போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கும் எரிச்சலும்-சலிப்பும்தான் மிஞ்சுது-!
ஒரு சிலரின் வெறுப்பேத்தும் வேலைகளால்- எதிர்வரும் நாட்களில்- இப்பிடியான போட்டிகளில் முன்வந்து யாரும் கலந்து கொள்வார்களா? 8)
வாதம் புரியும் அணிகளில் - உறுப்பினர் பற்றாக்குறை-ஏற்படும் என்று தயங்கினால்-
ஏற்கனவே இங்கு வாதத்தை வைத்தவர்களையே- மறு அணிசார்பிலும் பேச வாய்ப்பு கொடுங்கள்-!
நன்மை அணியில் வாதம் வைத்த நானும் -அதே போல் தீமையுண்டு என்று வாதிட தயார்-! இதில் ஒன்றும் கெளரவ குறைச்சல் இல்லை-!
இங்கே ஒருவரின் கருத்தை - இன்னொருவர்- கருத்தால் வெட்டி பேசுதல் தான் நடக்கிறது-!
ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டல்ல- என்பது என் நம்பிக்கை! 8)
வர்ணன் நீங்கள் சொல்வது உண்மை. அடுத்த முறை பட்டிமன்றத்தை அறிமுகப்படுத்துபவர்கள் 5 கட்டுப்பாடுகள் என்றாலும் முன் வைத்து தொடங்கவும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அணியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று அறிவித்தால் இப்படியான வறட்டு கெளரவங்கள் பிடிவாதங்கள் இல்லமால் போகும்.
யாருக்காவது வாதம் வைக்க வேணும் என்றால் நானும் தயார். நடுவர்களின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் எமக்கு சலிப்புத்தன்மை தான் ஏற்படுகின்றது.

