06-24-2003, 09:50 AM
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3762 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 3200 பேரும் பள்ளிப்பருவ வயதுகளில் பாடசாலை செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீடா நிறுவனம் பொது நலவாய கல்வி நிலையத்தின் அனுசரணையோடு கிழக்கில் மேற்கொண்ட ஆய்வின் போது இத் தகவல் வெளியாகியது. போர் நிலவிய சூழல், பெற்றோர்களின் இடப்பெயர்வு, வறுமை போன்றவையே 5 வயது முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் பாடசாலைக் கல்வியைத் தொடராமைக்கான காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது

