Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Douglas loses heavyweight !!
#4
டக்ளஸ் கட்சியிலிருந்து ஆலோசகர் விக்னேஸ்வரன் விலகல்!
[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 04:52 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான கே.விக்னேஸ்வரன் விலகி உள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


டக்ளஸ் தேவானந்தாவின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து தான் அக்கட்சியிலிருந்து விலகுவதாகவும் விக்னேஸ்வரன் தமது விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

டக்ளசின் ஆலோசகராக 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றிய விக்னேஸ்வரன் ஈ.பி.டி.பி.யின் வலதுகரமாகவும் செயற்பட்டவர்.

தான் டக்ளசிடமிருந்து விலகியமை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், டக்ளஸ் செயற்படும் தொணியுடன் தம்மால் இணைந்து செயற்பட முடியாது என்றும் ஈ.பி.டி.பி.யில் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் இல்லை என்றும் டக்ளஸ் சர்வாதிகாரியாக செயற்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி.யிலிருந்து விலகிவிட்டாலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல் டக்ளசின் ஈ.பி.டி.பி. கட்சியிலிருந்து அவரது செயற்பாடுகளை எதிர்த்து விலகி உள்ள 11 ஆவது நபர் விக்னேஸ்வரன். இவர்களில் பலர் படுகொலை செய்யப்பட்டு அந்தப் பழி விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

- புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 02-02-2006, 01:42 AM
[No subject] - by Thala - 02-02-2006, 01:48 AM
[No subject] - by கந்தப்பு - 02-02-2006, 03:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)