Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணத்தில் சிங்களத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் அடாவடி
#22
<b>சமாதான சமிக்ஞைகளை நிராகரிக்கும் சிறிலங்கா இராணுவம்: யாழில் தொடரும் கெடுபிடிச் சோதனைகள்! </b>
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 19:02 ஈழம்] [தாயக செய்தியாளர்]
சமாதான சமிக்ஞைகளை சிறிலங்கா இராணுவம் நிராகரித்துவிட்டு யாழில் தனது வழமையான கெடுபிடிச் சோதனைகளையும் அத்துமீறல்களையும் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


வலிகாமம் மேற்குப் பகுதியில் பல வீதிகளிலும் மற்றும் சாவகச்சேரி மீசாலையிலும், பருத்தித்துறை தும்பளையிலும் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வீதிச் சோதனைகளை முடுக்கி விட்டிருந்தனர்.

அராலி, வட்டுக்கோட்டை, மூளாய், மாவடி, சித்தன்கேணி, சங்கானை, நவாலி ஆகிய இடங்களில் வீதிகளில் பெருமளவில் நிறுத்தப்பட்டிருந்த படையினர் வாகனச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் படையினர் அவர்களை தீவிர உடற்சோதனைக்கு உட்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் பாகங்களையும் பிரித்து தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

தென்மராட்சியில் நேற்று மூன்று இடங்களில் சிறிலங்காப் படையினரால் வாகனங்கள் மறிக்கப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கொடிகாமம் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகிலும் நுணாவில் காவல் நிலையத்திற்கும் அருகிலும் கைதடி சந்தியிலும் வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளன. அடையாள அட்டைகளும் படையினரால் சோதனையிடப்பட்டன.

படையினரின் இத்தகைய செயற்பாடுகளை கடுமையாக கண்டிக்கும் தென்மராட்சி பொது அமைப்புக்கள், அமைதி நிலையை சீர்குலைத்து இயல்பு நிலையை குழப்ப படையினர் முயற்சிப்பதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இத்தகைய செயற்பாடுகளில் படையினர் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளன.

திருநெல்வேலிச் சந்தி, தபால் பொட்டிச் சந்தி வீதிகளில் நிற்கும் படையினரால் துப்பாக்கி முனையில் சைக்கிளில் செல்லும் பெண்கள், மாணவிகள் நிறுத்தப்பட்டு கேவலமான சொற்தொடர்களை பயன்படுத்தி கிண்டல் செய்யும் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகளில் சிங்களப் படைகள் ஈடுட்டிருப்பதாக பெண்கள் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

வீதியில் இளம் பெண்களிடம் அடையாள அட்டைகளை வாங்கும் படையினர் திரும்பி வருகையில் தம்மிடம் வந்து பெற்றுச் செல்லும் படி கூறி வருவதுடன் அவர்கள் இருக்கும் வீடுகள் தொடர்பாகவும் அவர்களின் வீட்டில் உள்ளோர் தொடர்பாகவும் கேட்டறிவதாகவும் பெண்கள் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தை அதிகாலையில் படையினர் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ்.சிறிலங்கா காவல் நிலையப் பின்வீதி, யாழ். நூலகப்பகுதி முன்வீதி, பின்வீதிகளை தற்பொழுது படையினர் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் பயிற்சி நடவடிக்கைகளில் படையினரும், காவல்துறையினரும் இணைந்து ஈடுபட்டிருப்பதாகவும் இதனால் காலை வேளையில் அப்பாதையூடாக பயணம் செய்ய பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

அவ் வீதியூடாகச் செல்லும் மீன் வியாபாரிகளும், வர்த்தகர்களும், அரச உத்தியோகத்தர்களும் வேறு வீதிகளை அதிகாலையில் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

யாழ். பேரூந்து நிலையப் பகுதியிலுள்ள ஓட்டோச் சாரதிகள் பலருக்கு படையினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனால் பீதியடைந்துள்ள ஓட்டோச் சாரதிகள் சாரதிகள் தொழிலில் ஈடுபட முடியாமல் வீடுகளிலேயே முடங்கியிருப்பதுடன் பலர் இடம்பெயர்ந்து தமது வாகனங்களுடன் குடாநாட்டின் வேறு பிரதேசங்களுக்கும் வன்னிக்கும் செல்கின்றனர்.

பலர் இத்தொழிலை கைவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதுடன் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

யாழ். நகரப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறும்போதெல்லாம் படையினர் ஓட்டோ சாரதிகளை கடுமையாக தாக்குவதுடன் அவர்களின் வாகனங்களையும் கடுமையான சேதத்திற்கு படையினர் உள்ளாக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சமாதான சூழலுக்கான சமிக்ஞைகள் வெளியிடப்பட்ட நிலையிலும், சோதனை நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் யாழ். குடாநாட்டில் தற்போழுது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களுடன் ஈ.பி.டி.பி குழுவினர் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் படையினரின் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலேயே இக் கொள்ளைச் சம்பவங்கள் துணிச்சலாக நடைபெற்று வருவதாகவும் படையினரின் பாதுகாப்புடன் ஈ.பி.டி.பி குழுவினர் ஆயுதங்களுடன் சென்று வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

குடாநாட்டில் இருந்த சமூக விரோதிகள், கொள்ளையர்கள் ஈ.பி.டி.பி குழுவிடம் இணைந்து தற்பொழுது கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு படையினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:11 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:14 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:52 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 06:32 AM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 06:34 AM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 03:34 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 03:35 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 03:37 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 05:12 PM
[No subject] - by மேகநாதன் - 01-24-2006, 03:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-24-2006, 03:30 AM
[No subject] - by மேகநாதன் - 01-24-2006, 04:24 PM
[No subject] - by மேகநாதன் - 01-24-2006, 04:27 PM
[No subject] - by மேகநாதன் - 01-25-2006, 09:17 AM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:02 PM
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:05 PM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 02:48 PM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 07:18 AM
[No subject] - by மேகநாதன் - 01-30-2006, 07:53 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 02:16 PM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:32 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 03:38 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:29 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 11:58 AM
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 06:08 AM
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 07:48 AM
[No subject] - by Sukumaran - 02-11-2006, 02:42 PM
[No subject] - by மேகநாதன் - 02-14-2006, 03:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)