Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கல் படங்கள்
#6
மதன், பொங்கல் படங்களோட இறுதி முடிவை நீ இப்போ வாசிக்கலாம் இல்லையா?

ம். 'விருமாண்டி'யும், புதுக்கோட்டை சரவணனும் தான் நெ.1 இடத்துல இருக்கு. 'விருமாண்டி'க்கு அதோட விளம்பர யுக்தி பலமா இருக்கு. கிட்டதட்ட 300 பிரிண்ட் ஆகி உலகமெல்லாம் ரிலீஸ் ஆகியிருக்கு சமீபகாலமா எந்த படத்திற்கும் இவ்வளவு ப்ரிண்ட் போடலை.

தேங்ஸ் டூ கிருஷ்ணசாமி இல்லையா?

ஆமா. ஆனா போன பொங்கல் மாதிரி இந்த தடவை எந்த படங்களும் அமையலை. போன வருஷம் தான், அன்பே சிவம் படம் எல்லாவித ரசிகர்களையும் திருப்திபடுத்திச்சு. ஆனா இந்த முறை

பரபரப்புல 'விருமாண்டி' தப்பிச்சிருச்சு. தனுஷ் புகழ்ல 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' வண்டி ஓடிட்டிருக்கு. விஜயகாந்தோட 'எங்கள் அண்ணா' பி & சி-யில நல்ல கலெக்.ஷன். 'கோவில்' தமிழகமெங்கும் சுமாரான ஓட்டம்தான். 'ஜெய்' பத்தி யாருமே பேசாததே அந்தப் படத்தோட ரிசல்டை தெளிவா சொல்லிடுது.

அப்போ எதுவுமே சரியில்லைங்கிறியா? கிட்டதட்ட ரசிகர்களோட உணர்வு இதுதான். 'விருமாண்டி' இவ்வளவு வன்முறையா இருக்குமான்னு எல்லோருமே கேக்கறாங்க.

ஆமா கடைசியா மிஸ்டர் கிருஷ்ணசாமி என்ன சொல்றார்?

அவர் இப்போ தேர்தல் வேலைகளில் பிஸியா இருக்கறதால 'விருமாண்டி' பத்தி எதுவுமே கமெண்ட் அடிக்கலை. அவருக்கும் படத்துல வன்முறைகள் அதிகமா இருக்கறது பத்தி செய்திகள் வந்தாலும் ஏதோ அமைதியா இருந்துட்டாரு.

முதல்லேயே இப்படி இருந்திருக்கலாம். ஆமா ரோஜா, விஜயசாந்தி ஆந்திராவுல போட்டியிடறாங்களே இங்க இதுமாதிரி எதுவும் இல்லையா?

சரத் ஏற்கனவே எம்.பி.யா இருக்கிறதால பெரிசா இங்கே நம்ம ஸ்டார்ஸ் யாரும் தேர்தல்ல நிக்கப்போறதில்லை. ஆனா ரஜினியோட ஆதரவு யாருக்குங்கிற கேள்வி பலமா எழுந்திருக்கு. தன்னோட படத்தை ரஜினி இந்த வருஷத்துல ஆரம்பிக்கறதால எந்த கட்சிக்கும் ஆதரவு தரப்போறதில்லை.

ஓ.கே. ஏதோ நாம ட்ரையா பேசிக்கிற மாதிரி இருக்கு. ஜாலியா ஏதாவது நீயூஸ்?

கௌதம் இயக்குற 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்துல சூர்யாவுக்கு ஜோடியா அபிராமியும் நடிக்கலை த்ரிஷாவும் நடிக்கலை. ஆனா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர நடிக்கிறதா தொடர்ந்து வர்ற செய்திகளைப் பார்த்து அபிராமியும், த்ரிஷாவும் குழம்பி போயிட்டாங்க. இதைப் பத்தி கேக்கறவங்ககிட்ட "நாங்க நடிக்கலை, யார் இப்படியரு நியூஸை கிளப்புறதுன்னு" எதிர்கேள்வியை கேக்குறாங்க.

சூர்யாவுக்கு ஜோடியா ரெண்டு பேருமே மேட்ச்சாதான் இருந்திருப்பாங்க. ஆமா மதன் 'எனக்கு 20 உனக்கு 18', 'குறும்பு' படங்கள்ல நடிச்ச தெலுங்கு ஹீரோயின் நல்லா இருந்தாங்கன்னு நிரைய பேர் சொல்றாங்களே.

ஆமா, நிகிதா, ஸ்ரேயா ரெண்டு பேருமே தியா, த்ரிஷாவைவிட ரசிகர்கள்கிட்ட அதிக மார்க் வாங்கினாலும் அவங்களோட மைனஸ் தெலுங்கு படங்கள்ல மட்டும் கான்சன்ட்ரேட் பன்றதுதான். இதனால தமிழ்ல இருந்து சில வாய்ப்புகளை மிஸ் பண்ணியிருக்காங்க. கடைசியா நிகிதா மட்டும் மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறாங்க.

குட் குட். வேறு ஏதாவது சுவாரஸ்யமான செய்திகள்.

மீடியாவுல பலமா கிசுகிசுக்கப்பட்ட சூர்யா-ஜோதிகா ஜோடி 'பேரழகன்' படத்திலயும், ஸ்ரீகாந்த்-ஸ்னேகா ஜோடி 'போஸ்' படத்திலயும் மறுபடியும் நடிக்க கிளம்பிட்டாங்க. ஏற்கனவே இவங்களைப் பத்தி ரொமாண்டிக்காக செய்திகள் காற்றில் வலம் வந்திருக்கு. இப்போ ஷ¨ட்டிங் ஆரம்பிச்சபிறகு நிரைய வேடிக்கை இருக்கு பாருங்கன்னு திரையுலகமே இந்த இரண்டு ஜோடிகளைப் பத்தி ஆர்வமா பேசிக்கறாங்க.

கிசுகிசுன்னா எல்லோருக்கும் அல்வாவாச்சே. விழுங்காமயா இருப்போம்.!

நன்றி - Cine South
Reply


Messages In This Thread
பொங்கல் படங்கள் - by Guest - 01-20-2004, 06:21 PM
[No subject] - by shanmuhi - 01-20-2004, 07:31 PM
[No subject] - by Guest - 01-20-2004, 08:24 PM
[No subject] - by vasisutha - 01-20-2004, 11:06 PM
[No subject] - by Paranee - 01-21-2004, 05:30 AM
[No subject] - by Guest - 01-27-2004, 05:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)