Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
US urges Sri Lanka to investigate kidnapping of TRO staff
#2
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல்: விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்!
[செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 22:51 ஈழம்] [ம.சேரமான்]
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விரைவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.


சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரகம் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 5 பணியாளர்கள் பொலன்னறுவ மாவட்டத்தின் வெலிக்கந்த பகுதியில் சனவரி 30ஆம் நாளன்று கடத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவரகம் வருத்தம் கொள்கிறது.

இச்சம்பவம் குறித்து தொடர்புடைய அதிகாரிகள் விரைவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவரகம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஜெனீவாவில் யுத்த நிறுத்தப் பேச்சுகள் நடைபெறும் சூழ்நிலையில் அனைத்துத் தரப்பினரும் பொறுமையும் அமைதி காக்க வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதுவரகம் மீண்டும் கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


www.puthinam.com
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 01-31-2006, 06:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)