01-31-2006, 12:34 AM
<span style='font-size:25pt;line-height:100%'>கனடாவில் இருந்து பிரபல கட்டாக்காலிகளின் தலைவன் நாடுகடத்தப்பட்டார்</span>
கனடாவின் ரொரன்ரோவில் பிரபல தெருச்சண்டியனாத் திகழ்ந்தவர் இலங்கைக்கு நாடு கடத்தபட்டுள்ளார். ஜேயசீலம் துரைசிங்கம் என்ற தெருச் சண்டியனே இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். சுமார் 17 வருடங்களுக்கு முதல் 1989 ஆண்டு கனடாவிற்கு வந்த இவர் சோலப்பூ என்ற தெருச் சண்டை குழுவினை நடாத்தி வந்தார். முன்னைநாள் புளொட் உறுப்பினரான இவர் இந்தியாவில் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்தார். கனடாவில் தெருச் சண்டைகளில் ஈடுபட்டு வந்த 1050 தமிழ் இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும், கனடா பொலிசாரின் தொடர் விசாரனைகளை தொடர்ந்து இவர்கள் நாடு கடத்தபடுவார்கள் என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும், தற்போது நாடு கடத்தப்பட்டவரும் கனடா நாட்டு வதிவிட உரிமை பெற்ற கனடாநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் என்று அறியமுடிகிறது. இவர்கள் தாங்கள் செய்துவரும் குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்வதற்கும், நாடுகடத்தப்படாமல் இருப்பதற்கும் இலங்கைக்கு நாடு கடத்தபட்டால் தம்மை இலங்கை படையினர் கொன்றுவிடுவார்கள் என்ற மாயை தோற்றத்தை உருவாக்க தம்மை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று பொலிசாரிடம் கூறிவருவதாக கனடா நாட்டு எல்லைக் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இவ்வாறான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச மட்டத்தில் அவப்பேரை உருவாக்கும் தெருச் சண்டியர்கள் இலங்கைக்கு நாடு கடத்தபடும் பொது தமிழீழ விடுதலைப் புலிகளும் இவர்களை விசாரனைக்கு உட்படுத்தி தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கனடாவில் நாசகார வேலைகளில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் என்று கனடாவாழ் ஈழத்தமிழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சுட்டது: நிதர்சனம்
ஆதாரம்