01-30-2006, 07:55 PM
[b]இளைஞனின் ஊக்குவிப்பான விமர்சனத்தை கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து இருக்கிறேன்.
மீண்டும் பகுத்தறிவு!!
மனிதன் நான் என்று சொல்லிக்கொள்வாய்...........
ஆறறிவு கொண்டேனென்று அழகாய் ஒரு கிரீடம் ...........
உனக்கு நீயே சூட்டிக்கொள்வாய்!..........
கண்ணுக்கு முன்னாலொரு சிசு பாலின்றியழுது தன் ஜீவன் கரைக்கையில்.....
கண்ணுக்கு தெரியா கடவுளுக்கதை குடம் குடமாய் கொண்டு சென்று..
ஊற்றி கும்பாபிஷேகம் செய்வாய்!
ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு கல்வி தராய்............
எரிகின்றதொரு வீட்டில் தணல் எடுத்து உன் வீட்டு உலை மூட்டுவாய்.........
மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில..........
"மணமிழந்து" போகையிலே இல்லத்தாள் இருக்க.... இன்னொரு துணை தேடி...........
தங்கத்தால் கொலுசு அவளுக்கு வேண்டியலைந்து - நீ
தரங்கெட்டு போயிருப்பாய்!
பட்டினியோடு உன் தாய் குடலெரிந்து குமுறியழுவாள் அங்கே-நீயோ.....
இங்கு... விஜய் படத்துக்கு சென்று விசில் அடித்து மகிழ்ந்திருப்பாய்!
இனம் .. இனம் என்று எழுத்தில் மட்டும் வீரம் கொள்வாய்....
எடுத்துச்சொல்லி வந்து யாரும் உதவி கேட்டால்...........
கதவை இழுத்துச் சாத்தி அவர் மனசை கொல்வாய்....
பழம் கிடைத்தால் போதும்...
தாயை வெட்டி வாழை கன்றின் காலடியில் புதைப்பாய்
பட்டாம் பூச்சி சிறகில் நூல் கட்டி..
அது பதைப்பதை பார்த்து ..பட்டம் விட்டேன் என்பாய்!
உயிர்களை வதைப்பதை ஒரு பொழுதுபோக்காய் கொள்வாய்...
உருப்படாத இந்த அறிவுக்கு... பகுத்தறிவென்று பதிலும் வேறு சொல்வாய்!
ஆற்றில் அள்ளுண்டு செல்லும் புள்ளிமான் பற்றி கவலை கொள்ளாய்...........
கரையில் இருந்துகொண்டு புல்லாங்குழலிசைத்தபடி அதை ரசிப்பாய்....!
கற்றால் என்ன கனவானென்று ஆனால்தானென்ன.........
உன்னையே நீயறியாவிடில்.... நீ திரியை தொலைத்த தீபமென்றாவாய்!
அலரிப்பூக்கள் கொண்டு அலங்கரித்த மகுடம் யாருக்கு வேண்டும்?
கறையான் புற்றை அலங்கரித்த கனகாம்பர மலரானாய் .. நீ
போ நீயும் உன் பகுத்தறிவும்....!!!

<b> .. .. !!</b>