01-30-2006, 03:40 PM
"போராடித்தான் எமது தேசத்தை மீட்கமுடியும்": தனது மகளைப் போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை!!
[திங்கட்கிழமை, 30 சனவரி 2006, 19:07 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துக்கு தன் மகளை ஒரு தந்தை வழி அனுப்பி வைத்திருக்கிற "நிகழ்கால" புறநானூற்று நிகழ்ச்சி தமிழீழத்தில் நடந்துள்ளது.
<img src='http://img71.imageshack.us/img71/2020/sa13nh.jpg' border='0' alt='user posted image'>
"எனக்கு இப்போது 56 வயதாகிறது. இந்த நாட்டில் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. ஆனால் எங்களுக்கு இன்னமும் நிம்மதி கிட்டவில்லை. எனவே நாங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் முழுமையாக அணிதிரண்டு போரிடுவதன் மூலம்தான் எமது தேசத்தை முழுவதுமாக மீட்கமுடியும். அப்போது தான் எமது பிள்ளைகளுக்காவது ஒரு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்" என்று கூறிய மயில்வாகனபுரம், விசுவமடுவைச் சேர்ந்த மு.மாரிமுத்து நேற்று தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரதும் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைவாக தனது மகளான (வயது 18) போராட்டத்திற்கு அனுப்பிவைத்தார்.
<img src='http://img214.imageshack.us/img214/157/sa26rn.jpg' border='0' alt='user posted image'>
மகளை போராட்டத்திற்கு அனுப்பி வைத்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
எமது தலைவர் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அனைவரும் சத்தியாக்கிரகம் செய்தனர். ஆனால் எங்களுக்கு முடிவு வரவில்லை. ஆனால், வன்னியில் நாங்கள் எல்லோரும் வயது வேறுபாடின்றித் தலைவருடன் சேர்ந்து போராடினோம். எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைத்தன. அதனால் தான் இன்று எமது இனம் ஓரளவாவது நிம்மதியாக இருக்க முடிகிறது. அனைவருமாக இன்னுமொரு முறை முயற்சித்தால் இறுதி வெற்றியையும் பெற்று, நிரந்தரமான நிம்மதி நமக்குக் கிடைத்துவிடும்.
கடந்த காலங்களில் எமது குடும்பம் போராட்டத்திற்கு பல்வேறு உதவிகளைச் செய்தது. ஆனால், எமது பிள்ளைகள் எவரும் முழுமையாக இணைந்து போராடவில்லை. எமக்கு அருகிலிருக்கும் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளும் மாவீரர்களாக இருக்கிறார்கள். இனிமேலும் இப்படியான குடும்பங்களில் தங்கி நின்று, குளிர்காய்ந்து நாம் வாழ்க்கையை ஓட்டுவது மனச்சாட்சிக்குச் சரியன்று. அதனால் தான் நாம் எமது மகளின் சம்மதத்தோடு அனைவருமாக இந்த முடிவுக்கு வந்தோம் என்றார் அவர்.
இந்நிகழ்வில் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர், தூயவன் அரசறிவியற்கல்லூரிப் பேராளிகள், பொதுமக்கள் அகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி:புதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>