01-29-2006, 11:18 AM
<i><b>புலிகளை அச்சுறுத்தும் விதத்தில் அமெரிக்க தூதர் உரையாற்றியதை கண்டித்து தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம்</b>
எவர் அச்சுறுத்தினாலும் வாலை நறுக்கும் ஆற்றல் தமிழ் இனத்துக்கு இருப்பதாக முழக்கம்
விடுதலைப் புலிகளை அச்சுறுத்தும் வகையில் கொழும்பில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் <b>சென்னை மதுரை தஞ்சை கோவை </b>ஆகிய நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான [i]ஆனூர் ஜெகதீசன் </i>பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் <i>தொல்.திருமாவளவன் </i>மார்க்சிய பெரியார் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் <i>வே.ஆனைமுத்து </i>தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் <i>தியாகு</i> மக்கள் கவிஞர் இன்குலாப் புரட்சிகர இளைஞர் முன்னணியின் நிர்வாகி <i>தமிழ்மணி</i> தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியின் <i>கி.வெங்கட்ராமன் </i>தமிழ்த் தேசிய மார்க்சிய கட்சியின் <i>இராசேந்திர சோழன் ஓவியர் புகழேந்தி</i> உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இயக்கத்தின் நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர்.
அமெரிக்கத் தூதுவரின் அச்சுறுத்தும் உரை மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான அமெரிக்க இந்திய உதவிகள் ஆகியவற்றைக் கண்டித்து கூட்டத்தில் உரையாற்றியவர்கள் பேசினர்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகள் எதனையுமே குறிப்பாக ஆயுதக் குழுக்கள் களைவுஅதிக உயர் பாதுகாப்பு வலயம் அகற்றல் மீன்பிடித் தடை உள்ளிட்ட தமிழர் தொழில் செயற்பாடுகளுக்கான சுதந்திரம் ஆகியவற்றை 4 ஆண்டு காலமாகியும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்பதால் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து நிற்கின்றனர் என்று தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.
தென் அமெரிக்க நாடுகளில் சோசலிச அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகளும் அந்த அரசாங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதையும் விடுதலை க. இராசேந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகள் அச்சுறுத்தினாலும் அதன் வாலை ஒட்ட நறுக்கும் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கும் தமிழினத்துக்கும் உண்டு என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கீழ் உள்ள தென் அமெரிக்க நாடுகளில் பொலிவியா உள்ளிட்ட தேசங்களில் சோசலிச அரசுகள் கோலோச்சுகின்ற போது ஈழத் தமிழர்களை அமெரிக்கா எதிர்க்கிறது எனில் தமிழீழத்தையும் சோசலிச நாடுகளின் அணியில் தான் அமெரிக்கா கருதுகிறது என்று தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் கடந்த ஓராண்டாக இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளித்து வருகிறது என்றும் இன்று கூட சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து குற்றம்சாட்டினார்.
தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒரு சந்தைப் பொருளாக அமெரிக்கா பார்க்கிறது. தேசிய இன விடுதலை விழுமியத்தை அமெரிக்கா விழுங்கப் பார்க்கிறது. அமெரிக்காவின் பாதத்துக்குக் கீழ் இலத்தீன் அமெரிக்க நாடுகள் கிளர்ந்து எழுந்துள்ளன. உலகம் முழுவதும் விடுதலை விரும்பும் நாடுகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.
உலகம் முழுவதும் விடுதலைப் போராட்டத்தை இடதுசாரிகள் ஆதரிக்கின்றன. ஆனால்இ ஈழத்தையும் இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும். தமிழக இடதுசாரிகள் சிங்கள ரத்னா விருது பெற்ற இந்து'ராமின் அணுகு முறையைப் பின்பற்றக் கூடாது. இந்த நாட்டில் குறைவான எண்ணிக்கையில் இருப்போருக்கான நலன் தான் அவரது அணுகு முறைதான் என்றார் மக்கள் கவிஞர் இன்குலாப்.
அமெரிக்க தூதுவரின் அச்சுறுத்தும் உரையைக் கண்டித்தும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்பதையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
"சர்வதேச இடதுசாரி சக்திகளுக்கு விடுதலைப் புலிகள் நேசக்கரம்" என்ற தலைப்பில் புலிகளின் குரல் அரசியல் ஆய்வரங்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமாக புதினம்' இணயத்தளத்தில் வெளியிடப்பட்டதையும் கியூபாவும் தமிழீழமும் என்ற தலைப்பில் தமிழகத்தில் கியூபா ஆதரவு மாநாட்டை நடத்துகிற இடதுசாரி சக்திகள் கியூபாவுக்கு நேசக்கரம் நீட்டும் தமிழீழம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் இந்த கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன.
2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட இயக்கங்களின் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தமிழீழ விடுதலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாகவும் ஈழத் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றிய அமெரிக்க தூதுவரைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பினர்.
இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமையிலும்இ மதுரையில் தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன். தலைமையிலும் கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையிலும் நடைபெற்றன.
நாளை 30 ஆம் திகதி சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
thinakkural
http://www.thinakkural.com/New%20web%20sit...Important-4.htm

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>