Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்-முஸ்லிம் நல்லுறவு பேணல் முயற்சிகள்
#2
<b>முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருப்பது தமிழ், முஸ்லிம் உறவை பாதிக்கும்! - முஸ்லிம் பிரதிநிதிகளிடம் எழிலன் முறையீடு- </b>

திருமலை முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவல் படை என்ற போர்வையில் ஆயுதங்கள் வைத்திருப்பதால் இனமோதல்கள் ஏற்படுவதுடன் அப்பாவித் தமிழ் மக்களும் பலியாகும். சந்தர்ப்பம் ஏற்படுமென திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்தார்.

மூதூர் பகுதி பள்ளி வாயல்களின் தலைவர்களுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை சம்பூர் அரசியல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

நேற்று பிற்பகல் 2.00 மணி தொடக்கம், 4.00 மணிவரை நடைபெற்ற இச்சந்திப்பில் மூதூர், தோப்பூர், ஜின்னாநகர், பாரதிபுரம், ஆகிய இடங்களைச் சேர்ந்த 20ற்கும்மேற்பட்ட பள்ளிவாயல்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட கட்டளைத்தளபதி கேணல் சொர்ணம், மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன், ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவிக்கையில்:- மூதூர்ப் பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதுடன் ஆயுதங்களையும் வைத்துள்ளனர். இது இன முரண்பாட்டை உருவாக்கும் என்றார்.

இதற்குப் பதிலளித்த முஸ்லிம் பிரதிநிதிகள்:- முஸ்லிம்கள் ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என்றார். இவ்வாறான சந்திப்புக்கள் எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை நடாத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.


<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 09:10 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 08:22 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:01 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)