01-29-2006, 09:03 AM
<b>மேஜர் கபிலனின் வித்துடல் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைப்பு </b>
மட்டக்களப்பு மாவட்டம் வடமுனைப் பகுதியில் கடந்த 26ம் திகதி சிறிலங்கா இராணுவமும், ஒட்டுப்படைகளும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த மேஜர் கபிலன் (பொன்னுச்சாமி - வேலுப்பிள்ளை) சந்திவெளி திகிலிவட்டையை சொந்த முகவரி, தற்போதைய முகவரி வடமுனை மட்டக்களப்பு. இம்மாவீரனின் வித்துடல் வெள்ளிக்கிழமை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது.
27ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அவரது தற்காலிக இல்லத்திலிருந்து எடுத்துச் சென்று திகிலிவட்டை அ.க.த. பாடசாலையில் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. அங்கு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் செல்வன் மாமா தலைமையில் வீர வணக்கக் கூட்டம் இடம்பெற்றது. முதல் நிகழ்வாக பொதுச் சுடரினை குடும்பி மலைக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் ஒளியன், ஏற்றி வைத்தார். வித்துடலுக்கு ஈகைச்சுடரினை மாவீரனின் மனைவி ஏற்றி வைக்க, நிகழ்வுரையினை ஓய்வு பெற்ற அதிபர் கிருஸ்ணபிள்ளையும், அரசியல் பொறுப்பாளர் ஒளியன் அவர்களும் நிகழ்த்தினர்.
மலர் வணக்கம் முடிவுற்றதும், தரவை மாவீரர் துயிலுமில்லத்திற்கு வித்துடல் எடுத்துச் சென்று அங்கு பூரண இராணுவ மரியாதையுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. இந்நிகழ்வில் போராளிகள், தளபதிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>

"
"
"