01-29-2006, 01:32 AM
<b>விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம் குழு சந்திப்பு </b>
[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:21 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம்கள் குழு இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேசியது.
மூதூரில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று பிற்பகல் இச்சந்திப்பு நடந்தது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுவினரது நடமாட்டம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
இந்த ஆயுதக் குழுவினரது செயற்பாட்டினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான உறவு சீர்குலையும் என்றும் புலிகள் தரப்பு சுட்டிக்காட்டியது.
சிறிலங்கா ஆக்கிரமிப்பு மூதூர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இரு தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இருதரப்புக் குழுக்கள் அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் சொர்ணம், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் சி.எழிலன் மற்றும் மூதூர், தோப்பூர், ஜின்னா நகர், ஆசாத் நகர் முஸ்லிம் மதத் தலைவர்களும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>

"
"
"