01-28-2006, 12:46 PM
MUGATHTHAR Wrote:Quote:பெண்களும் ஆண்களுக்கு இணையா ஒழுக்கத்தை இழக்க முற்பட்டால்..ஆண்களைப் போலவே தண்டனையையும் செய்த குற்றத்துக்கான நோக்கலையும் சந்திக்க வேண்டும்
இது நடைமுறைக்கு சாத்தியமானதா..........? சமுதாயத்தால் பெண்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்களாகவும் மெல்லிய பார்வையாலுமே பார்க்கப்படுகிறார்கள் ஆனாபடியால் பெண்கள் குற்றவாளிகள் எண்டு கொடுக்கப்படும் தண்டனைகள் கூட சிலவேளைகளில் விமர்சிக்கப்படுவதை பாக்கிறோம் தானே....
மேலை நாடுகளில்க் கூட பெண்கள்மீது மென்போக்கான பார்வைதான் இருக்கிறது..... பெண்களின் பெரும்பாலோனாரின் வலிமையின்மையான மென்போக்கை மற்றவர்கள் தவறாகப் பயன் படுத்துவதை யாரும் ஆதரிப்பது இல்லை.... ! உடல் வலிமை இல்லாமல்(பலபேர்) பாதுகாப்பு இன்மையாக அவர்கள் உணரும் போது ... தெளிவின்மையான முடிவுகளை எடுக்கிறார்கள். அது தவறாய்கூட அமையலாம்... இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை எடுப்பதுதான் நல்லது..
::

