01-28-2006, 05:08 AM
<b>மேஜர் கபிலனின் வித்துடல் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது.</b>
மட்டக்களப்பு - பொலன்னறுவ வடமுனை எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலை மீது நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத் துறையினர் மற்றும் ஒட்டுப்படையினரால் நடத்தப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் மேஜர் கபிலன் வீரச்சாவடைந்திருந்தார்.
வீரச்சாவடைந்த சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 34 அகவையுடைய மேஜர் கபிலனின் (பொன்னையா வேலுப்பிள்ளை) வித்துடல் பூரண இராணுவ மரியாதையுடன் வெள்ளி நண்பகல் 12.30 மணிளவில் தரவையில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.
திகிலிவெட்ட அ.த.க பாடசாலையில் மக்களின் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்குகிருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு பின்னர் விதைக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத்தளபதி கேணல் பானு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் மாவட்ட துணை இராணுவ தளபதி நாகேஸ் மற்றும் பொறுப்பாளர்கள் போராளிகள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினார்க்ள்.
<i><b>தகவல் மூலம் - பதிவு.கொம்</b></i>

"
"
"