Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேருவளை - அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம்
#3
<b>அளுத்கமவில் பதற்றம் தணிந்தது </b>
இன மோதல்களால் பதற்றம் நிலவிய அளுத்கம பிரதேசத்தில் நிலைமை இயல்புக்குத் திரும்பி உள்ளதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


அளுத்கமவில் சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே கடந்த இரு நாள்களாக நடைபெற்ற மோதலில் பலர் படுகாயமடைந்தனர். வர்த்தக நிறுவனங்கள் சேதமடைந்தன.

இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையின் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலதிக சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

அப்பிரதேசங்களை சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ நேற்று பார்வையிட்டார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் நிலைமை தற்போது சீரடைந்து இயல்பு நிலைமைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறினார்.


<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-26-2006, 08:41 PM
[No subject] - by மேகநாதன் - 01-28-2006, 04:58 AM
[No subject] - by தூயவன் - 01-28-2006, 05:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)