01-28-2006, 04:22 AM
Quote: ஆனால் வைகோ தொண்டனுக்கும் தொண்டன். வைகோவின் ஒவ்வொரு தொண்டனும் வைகோதான். ம.தி.மு.க.வின் ஒருக்கிற ஒவ்வொரு தொண்டனும் ஈழத் தமிழர்களுக்காய் சர்வபரி தியாகத்துக்கும் தயாராக உள்ளவர்கள்.நிச்சயமாக நண்பரே!
நமக்காய் சிறையேகிய வைகோவுக்காக ஊர் முழுக்கப் போய் அதை நியாயப்படுத்திப் பேசியவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். வீதி வீதியாக எங்கள் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்காமல் யார் கொடுப்பார்கள் என்று வைகோவின் குரலாய் வலம் வந்தவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
ஆகவே தமிழகத்தின் அரசியலில் வைகோ வளர வேண்டும். அது தமிழினத்தின் நன்மைக்கானது என்பதை யாழ். தளத்திலே விவாதிப்போர் உணர வேண்டும்.
தமிழர் நலம் கருதாதோர் விமர்சிக்கட்டும். அவர்களுக்கு நேற்றைய வரலாறும் தெரியாது. இன்றைய நிகழ்வுகளும் தெரியாது. நாளைய வரலாற்றுச் சூழலும் தெரியாது.
<b>சங்கர்</b>
இங்கே அவரை அவமதிக்கும் கருத்துக்களை பிரயோகிப்பது என்பது அவரின் மனதை வைதைக்கும் கருத்துக்களாகவே கொள்ளப்பட வேண்டும்.
[size=14] ' '

