Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர் அழும் ஓசை ! ! !
#1
போர் மேகம் சூழுமோ ! ! !

கருக்கொண்ட போர்மேகம்
கலைந்துதான் போகுமோ
எம் கனவென்னும் ஈழம்
காட்சியாய் தோன்றுமோ
செங்குருதி எம் மண்ணில்
பன்னீராய் தெளிக்குமோ - இல்லை
சிங்கள சிறகுடைத்து
எம் சிந்தை மகிழ்விக்குமோ !

சொந்த மண்ணிலே - எம்
சோரம் போய்விடுமோ
கூட்டு ஓப்பந்தம் எம்மை
கொடுமைக்கு ஆளாக்குமோ !
வெந்த உள்ளங்கள் மீண்டும்
வேல் பாய்ந்தால் ஏற்குமோ !

வலைவீசி எம் இறகை
வசமாக்க முடியுமா - சிங்கள
சிற்றீசல் எம்மண்ணில்
சிறகடிக்க விடுவோமா ?
கதிரையில் அமர்ந்துகொள்ள
கைகொடுத்து ஓப்பந்தம்
கனவான எம் ஈழத்தை
கருவிலேயே அழிக்க ஓப்பந்தம்

சந்திரிகாவே சாக்கடைப்பிசாசே
உன் விஞ்சிய ஆட்சியெல்லாம்
வீணாகிப்போகமுன்னம் - எம்
சொந்தமண் தளிர்விடும் காலமிதில்
பன்னீர் தெளித்து வாழ்த்திநின்றுகொள்
கருவறுக்க முனைந்துநின்றால்
கனமிழந்து போவது உன்
கற்பனையாய் உயர்ந்துநிற்கும்
கட்சிக்கோப்புக்கள்தான்

கதிர்காமரே காமப்பிசாசே
உன் அறளை வார்த்தைகள்
உன்னுடனே இருக்கட்டும்
தாய்மண் தாய் மொழி
தனித்தறியா பிண்டமே
உன் தறிகெட்ட போக்கு
இத்தடன் ஓழியட்டும்
சொந்த மண்ணிற்காய்
சொந்த மொழிக்காய்
ஒற்றை வார்த்தை
ஓற்றுமையாய் என்று மொழிந்தாய்
ஒண்டவந்து நின்று உன் உண்டி நிரப்புகின்றாய்
எம் உயிர் அழும் ஓசை உன் செவிநுழைந்ததா
நுழைந்தாலும் நீ முடம்தானே
புரியவபோகின்றது
[b] ?
Reply


Messages In This Thread
உயிர் அழும் ஓசை ! ! ! - by Paranee - 01-22-2004, 05:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)