01-27-2006, 08:26 PM
ஈழமகன் Wrote:முதலாவது சம்பவத்தில் பெண்ணுக்கு 3 மாதம் வரும் வரை தாய் என்ன செய்து கொண்டிருந்தார். இனியும் காலம் தாமதிக்காது இரு சாராரும் கதைத்து ஒரு முடிவிற்கு வரலாம். இந்த மாணவி எப்படி அவனை திருமணத்திற்கு முந்திய உறவில் அனுமதிக்கலாம். இவருடைய அனுமதியின்றி நடைபெற்றிருந்தால் ஏன் 3 மாதம் வரை பொறுந்திருந்தார்.
மற்றும் இந்த பிரச்சனைக்கு அவர்களை கூப்பிட்டு ஏன் அவர்களுக்கு வீண்சிரமங்களை கொடுக்கிறீர்கள். உங்கள் பெண்ணின் தவறால் ஏற்பட்டதை நீங்களே சீர்செய்யுங்கள்.
நல்லா இருக்கு உங்கள் கதைஉங்கள் பெண்ணால் ஏற்பட்டதை நீங்களே தீர்க்கச் சொல்கிறீர்கள் ஏதோ தப்பு செய்த ஆண் தப்பே செய்யாத மாதிரி. ஏனண்ணா ஒரு பஸ்ஸில போற பெண் நான் இண்டைக்கு கெட்டுப்போகணும் என்ன கெடுத்திடு எண்டு கேட்டு கெட்டுப்போன மாதிரி அல்லவா உங்கட கருத்து இருக்கு. திருமணத்துக்கு முன் எப்படி ஒர பெண் உறவில் ஈடுபடலாம் என்று கேட்கிறீர்கள் ஏன் அப்படி அவ்வாணைப்பற்றி கேட்கவில்லை. அல்லது நீங்களும் ஒரு ஆணாக இருப்பதால் அதிலிருந்து தப்ப பார்க்கிறீர்களா. கற்பு என்பது ஆண்,பெண் இருவருக்கும் சம்பந்தப்பட்டது. அதனை ஏன் பெண்ணுடன் மட்டும் நிறுத்திப் பார்க்கிறீர்கள். உங்களின் இப்படியான பார்வைகளே இப்படியான ஆண்களை தப்பு செய்ய தூண்டுகிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

