Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கின்னஸ் சாதனை சிறுவன் கிஷன்
#1
<img src='http://img81.imageshack.us/img81/5964/kishan9xa.jpg' border='0' alt='user posted image'>

நிருபர்களின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் சொல்லும் அந்த சிறுவனை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் வரும். மழலை மேதைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் மாஸ்டர் கிஷன், சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது கரிகால் சோழன் கதைதான் நினைவுக்கு வந்தது. சிறுவன்தானே என்று கரிகாலனை ஒதுக்கியவர்கள் அந்த மன்னனின் அறிவுத்திறனுக்கு முன் தலை வணங்கினார்களே, அதுதான் நடந்தது அன்றைக்கும்!

<b>[size=18]தன் 9-வது வயதில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் கிஷன்.

இந்த சிறுவனை பற்றி கேள்விப்பட்டு ஆர்வத்துடன் முன் வந்து கிஷன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கிஷெராப்! நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் கிஷன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறாராம். பிறகு தன் ஆறாவது வயதில் பாட தொடங்கி, ஹீரோ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து அப்படத்தின் டைட்டில் பாடலையும் தானே பாடியிருக்கிறார். இவர் பாடிய பல பக்தி பாடல்கள் கேசட்டுகளாக வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது.

இதற்கு முன்பு சிட்னி லிங் என்ற நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன்தான் ஒரு திரைப்படத்தை இயக்கி உலக சாதனை புரிந்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக அந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார் கிஷன்.

ஹிந்தியில் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தை தமிழிலும் தயாரிக்கவிருக்கிறார் ஸ்ரீராமுலு. நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கிஷன் இயக்குகிற அழகை கண்ணார ரசித்துதான் இந்த முடிவுக்கே வந்திருக்கிறார் ஸ்ரீராமுலு! தமிழில் இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. தமிலும் நடித்து தர சம்மதித்திருக்கிறார் ஜாக்கிஷெராப்!

பிரஸ்மீட்டில், ஸ்கூலில் உங்க வயசு பசங்க கூட விளையாடுவீங்களா? என்று கிஷனிடம் கேட்டபோது, எப்பவாவது விளையாடுவேன். விளையாடுவதைவிட தினம் ஒரு படம் பார்ப்பதுதான் எனக்கு இஷ்டம் என்று சொன்ன கிஷன், [b]தமிழில் சூர்யா அங்கிளை வச்சு ஒரு படத்தை இயக்கணும். அதுதான் என் ஆசை</b> என்று சொல்ல, மூக்கில் விரல் வைக்காத குறையாக அதிசயித்தார்கள் பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும்!

தமிழ்சினிமா.கொம், Idea

யப்பா....... Confusedhock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கின்னஸ் சாதனை சிறுவன் கிஷன் - by Danklas - 01-27-2006, 06:09 PM
[No subject] - by Rasikai - 01-27-2006, 08:46 PM
[No subject] - by கறுப்பி - 01-27-2006, 09:06 PM
[No subject] - by kavithan - 01-27-2006, 09:41 PM
[No subject] - by தூயவன் - 01-28-2006, 04:12 AM
[No subject] - by Danklas - 01-28-2006, 08:18 AM
[No subject] - by தூயவன் - 01-28-2006, 02:38 PM
[No subject] - by தூயவன் - 01-28-2006, 02:43 PM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 05:43 AM
[No subject] - by தூயவன் - 01-29-2006, 05:46 AM
[No subject] - by Mathan - 01-29-2006, 05:48 AM
[No subject] - by தூயவன் - 01-29-2006, 05:51 AM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 05:54 AM
[No subject] - by தூயவன் - 01-29-2006, 05:57 AM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 06:03 AM
[No subject] - by தூயவன் - 01-29-2006, 08:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)