01-27-2006, 05:32 PM
ukraj Wrote:தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...
கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?
ம் இதுவும் நியாயம் தானே..! பெண் என்பதற்காக மன்னிப்பது பாவம் பார்ப்பது எமது சமூக வழமை...அதை தற்போது பெண்கள் தவறாக பாவிக்க முற்பட அனுமதிக்க கூடாது. சுதந்திரம் எல்லா மனிதருக்கும் உண்டு. பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் ஆண்களோடு இணைந்து அவர்களுக்கு இணையாக ஒழுக்கத்தை இழக்கக் கூடாது. அப்படி செய்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கப்படும் தண்டனை அவர்களின் குற்றங்கள் தொடர்பில் நோக்கப்படும் நோக்கு ஒரே இயல்பினதாக இருக்க வேண்டும். இருப்பினும் எந்த மனிதனும் கெட்டவனல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலை அவனைக் கெட்டவனாக்கிறது.தப்புக்கு தூண்டுகிறது. எனவே எல்லோருக்கும் போதிய அளவு திருந்த வழிகாட்டலும் சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும். தண்டனைகளை நிறை வேற்ற முன் அவை பல தடவை பரிசீலிக்கப்படவும் வேண்டும். எந்த மனிதனின் வாழ்வுரிமையையும் நினைத்த மாதிரிக்குப் பறிக்க முடியாது. அவனால் பலரின் வாழ்வுரிமை சமூகத்தின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்றால் குற்றத்துக்கு தண்டனை வழங்கத்தான் வேண்டும்..அவன் திருந்தாத பட்சத்தில்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

